தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. இன்று அமைச்சராக பதவியேற்கும் 23 பேர்.. யார் யாருக்கு வாய்ப்பு?
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் 2 பேர் அமைச்சரவையில் இணைய உள்ளனர். அதேபோல் தவெகவில் இருந்து 19 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. முதல்வர் விஜய் மே 10ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற போது, அவருடன் சேர்ந்து 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு 3 நாட்களுக்கு முன்பாக இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் சுமார் 20 துறைகளுக்கும் மேல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இதனால் தமிழக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய இரு கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விசிக சார்பாக வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் சார்பாக ஷாஜகான் ஆகிய இருவரும் அமைச்சராக பதவியேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மொத்தமாக ஆளுநர் மாளிகையில் 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தவெக சார்பாக 19 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பாக 2 பேரும், விசிக மற்றும் ஐயூஎம்எல் சார்பாக தலா ஒருவரும் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. தவெக சார்பாக விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத், ஆர்கே நகர் எம்எல்ஏ மரியா வில்சன், சேலம் பார்த்திபன், பர்வேஸ் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் 8 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சரவை நியமிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் தவெக அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி!












Click it and Unblock the Notifications