Anand Mahindra: தலைமை செயலகத்தில் பொலிரோ காரை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்.. ஆனந்த மகிந்திரா அடித்த கமெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 40 புதிய பொலீரோ ஜீப் வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கு பதிலாக வாகனத்தை இயக்கி பார்த்து ஒரு ரவுண்டு சென்று வந்தது அங்கிருந்த அதிகாரிகளை வியக்க வைத்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவிய நிலையில், விஜய்யை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மகிந்திரா நிறுவனங்களின் தலைவரான ஆனந்த் மகிந்திராவும், முதல்வர் விஜய் தனது நிறுவனத்தின் காரை இயக்கி பார்த்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

CM Vijay Drives Mahindra Bolero at Secretariat Anand Mahindra Reacts to Viral Video

ஜீப்பை இயக்கிய விஜய்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 40 புதிய பொலீரோ ஜீப் வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கான சேவையை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் வாகனங்களுக்கான சாவிகளை டிரைவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது கடைசியாக சாவியைப் பெற்றுக் கொண்ட டிரைவரிடம் முதல்வர் விஜய் நான் இந்த ஜீப்பை இயக்கி பார்க்கலாமா? என்று கேட்டார். டிரைவர் மகிழ்ச்சியில் தலையசைத்தார். உடனே முதல்வர் விஜய் அந்த பொலிரோ ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அருகில் டிரைவரையும் அமரச் செய்தார். ஜீப்பை இயக்கிய விஜய் தலைமை செயலகத்தை ஒரு சுற்று சுற்றி புறப்பட்ட இடத்திற்கே வந்து இறங்கினார்.

ஆனந்த் மகிந்திரா ட்வீட்

பொதுவாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர்கள் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால் விஜய் கொடியசைப்பதற்கு பதிலாக வாகனத்தை இயக்கி பார்த்து ஒரு ரவுண்டு சென்று வந்தது அங்கிருந்த அதிகாரிகளை வியக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்க்கு டிரைவர் நன்றி தெரிவித்தார். முதல்வர் விஜய் டிரைவரை அருகில் அமர வைத்து வாகனத்தை ஓட்டி சென்றது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மகிந்திரா நிறுவனங்களின் தலைவரான ஆனந்த் மகிந்திராவும், முதல்வர் விஜய் தனது நிறுவனத்தின் காரை இயக்கி பார்த்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எளிமையான உறுதியான பொலிரோதான் நான் ஓட்டுவதற்கு விரும்பும் கார்.. முதல்வர் ஓட்டுவதை பார்ப்பதிலும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவும் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஆனந்த் மகிந்திரா விரைவில் தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ஆனந்த் மகிந்திரா விரைவில் முதல்வர் விஜய்யை சந்தித்து தமிழகத்தில் முதலீட்டு திட்டங்களை அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+