டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழப்பு.. சென்னை தாம்பரம் அருகே சோகம்

  • சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் 24வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளதால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்பே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை டெங்கு விழிப்புணர்வு பணிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழத்தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுக்கள் நன்னீரில் இருந்து உருவாகக்கூடியவை.

    எனவே மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசு உற்பத்திகள் அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னை தாம்பரத்தில் 24 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    சோமங்கலம் அருகே மேலத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (24). இவருக்கு, கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பார்த்தசாரதியை உறவினர்கள் சோமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

    அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டெங்கு பாதிப்பால் பலியான பார்த்தசாரதி என்ற அந்த இளைஞருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து வந்ததாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Dengue fever: The death of a 24-year-old man from dengue fever at the Tambaram Government Headquarters Hospital has caused a shock. The incident has sparked a stir, as the man's relatives have filed a police complaint alleging that the death occurred because he did not receive proper treatment for dengue at a government primary health centre.