ரூ.30 கோடி குதிரை பேர புகார்.. கைதான மதுரை அதிமுக நிர்வாகி மன்னனை விடுவிக்க கோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்ட புகாரில் இன்று கைது செய்யப்பட்ட மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், அதிமுக நிர்வாகியுமான மன்னன் இன்று கைது செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கிவிட்டு இன்று கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அவரை விடுவிக்க அதிரடியாக உத்தரவிட்டது.

Madurai AIADMK functionary Mannan

மதுரையை சேர்ந்தவர் மன்னன். இவர் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் ஆவார். தற்போது அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்எல்ஏவிடம் மன்னன் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக புகார் கிளம்பியது.

இந்த புகாரை மதுரை மத்திய சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏவாக இருக்கும் முஸ்தபா கூறினார். சட்டசபையில் தவெக ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதனை செய்தால் முதலில் ரூ.15 கோடியும், அதன்பிறகு ரூ.15 கோடியும் தரப்படும் என்று தன்னிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியதாக கூறினார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக துணை மேயர் மன்னன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி நவம்பர் 7 (நாளை) காலை 10 மணிக்கு மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்று திடீரென்று மன்னன் கைது செய்யப்பட்டார்.

இன்று காலையில் மன்னன் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆரோக்கியராஜ், ஆய்வாளர் வீரம்மாள் உள்ளிட்ட போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். முதல்வர் விஜய்யின் தவெக அரசை கடுமையா சாடினார். இந்நிலையில் தான் இன்று கைதான மன்னன் விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று இரவு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

அப்போது நீதிமன்றம், ''நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிவிட்டு கைது செய்தது ஏன்?'' என்று கேள்வி எழுப்பியதோடு, நாளைய தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக நிர்வாகி மன்னனை சொந்த ஜாமீனில் விடுவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+