பெங்களூரில் ஷாக்! பெட்ரோலில் 30%க்கும் அதிகமாக எத்தனால் கலப்பு! அரசு ஆய்வில் வெளிவந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெட்ரோலில் 20% (E20) எத்தனால் கலக்கும் திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், கர்நாடகாவில் 30% வரை பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோலை அடித்தால் மைலேஜ் கிடைப்பதில்லை என்பதுதான் வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு. மைலேஜ் கொடுக்காததால், அதிக அளவு பெட்ரோலை பயன்படுத்த வேண்டி வருவதாகவும், எனவே E20 பெட்ரோல் எனும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Karnataka petrol

ஆக்ஷனில் கர்நாடக அரசு

இப்படி இருக்கையில், கர்நாடகாவில் அம்மாநில உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷாத், கர்நாடாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எத்தனால் கலக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார். வாகன ஓட்டிகளிடமிருந்து மைலேஜ் குறைவதாகவும், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து பெங்களூர், கோலார், சிக்கபல்லபுரா, புறகர் பெங்களூர், ராமனகரா, மங்களூர் மற்றும் துமகூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 63 பெட்ரோல் மாதிரிகளை அரசு சேகரித்து சோதனை செய்தது.

ஆய்வில் வெளியான உண்மை

இந்த மாதிரிகள் முதலில் இந்தியன் ஆயில் (IOCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனங்களின் சொந்த ஆய்வகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், அவர்கள் எத்தனால் கலப்பு அளவை அறிக்கையில் குறிப்பிடவில்லை. நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பியும் அவர்கள் பதிலளிக்காததால்.. அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டு.. தனியார் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது முழு பூசணிக்காயை பெட்ரோலிய நிறுவனங்கள் சோற்றில் மறைத்திருக்கின்றன. சோதனையில் 5ல் 4 மாதிரிகளில் 20% அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏமாற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள்

அதிகபட்சமாக IOCL-ல் 31.2% எத்தனால் கலக்கப்பட்டிருந்தது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் (HPCL POWER) மாதிரியில் 30.5% அளவுக்கும், மற்ற நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளிலில் 27%, 26.5%, 26.1%, 25.5%, 22.6%, 22.4%, 20.8%, 20.6% அளவுக்கு எத்தனால் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் ஷெல் நிறுவனத்திடமிருந்து எடுக்கப்பட்ட முதல் மாதிரியில் 25.5% மற்றும் இரண்டாவது மாதிரியில் 13.5% அளவுக்கு மட்டுமே எத்தனால் கலக்கப்பட்டிருக்கிறது.

E30, E31ஐ வாகனங்கள் தாங்காது

இந்தியாவைப் பொறுத்தவரை 35 கோடி வாகனங்களில், 99 சதவீத வாகனங்கள் E20 எரிபொருளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட புதிய BS6 வாகனங்களின் கூட E20 எரிபொருளைதான் தாங்கும். E30, E31ஐ தாங்காது.

எத்தனால் அதிகமாக கலப்பதால், அது என்ஜினுக்குள் இருக்கும் கழிவுகளை லேசாக்கி.. எரிபொருள் வடிகட்டிகளை அடைத்து, எஞ்சினை பாழாக்கும். நிதி ஆயோக் அறிக்கையின்படி, E20 பெட்ரோலை நிரப்பும் E20 வாகனங்களில் 1-2% வரை மைலேஜ் குறையும். பழைய கார்களில் 6-7% வரையும், பழைய இரு சக்கர வாகனங்களில் 3-4% வரை மைலேஜ் குறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், E20க்கு பதிலாக E30, E31 பெட்ரோலை பயன்படுத்தினால்.. மைலேஜ் இன்னும் மோசமாக அடிவாங்கும்.

பெட்ரோல் பம்புகளில் உள்ள விட்கோ போன்ற பிரபலமான விநியோக இயந்திரங்களில் மட்டுமே.. E15 பெட்ரோல் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் எத்தனால் கலப்பால் ஏற்படும் வானம் பாதிப்புகளுக்கான காப்பீட்டு பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதால்.. நுகர்வோர் வாகன ஓட்டிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

வாகன ஓட்டிகள் தலையில் கை வைத்த மத்திய அரசு

மைலேஜ் குறைவதால் ஏற்படும் இழப்பு மற்றும் வாகன பழுது பார்ப்பு செலவு என ஒட்டுமொத்தமாக வாகன ஓட்டிகளுக்கு இந்தியா முழுவதும் ஆண்டுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி நிதி சுமை ஏற்படுவதாக கர்நாடகா அரசு மதிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவே E20 திட்டம் என மத்திய அரசு கூறினாலும்.. வாகன ஓட்டிகளுக்கு விலை குறைத்தது போன்ற எந்த பயனும் இல்லை. அதே நேரம்.. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள்.. கடந்த ஆண்டு மட்டும் ரூ. 77,821 கோடி அளவுக்கு கூட்டு லாபம் பெற்று இருக்கின்றன.

முன்னதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 20 சதவீதத்திற்கும் மேல் எத்தனால் கலக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+