கேட்கும் பிராண்ட் இல்லைனு சொல்லக் கூடாது.. டாஸ்மாக்கில் 4 புதிய பிராண்டுகள்.. விலை எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையை அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது... முக்கியமாக, கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, புதிதாக 4 வகையான பீர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்...!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4058 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் எலைட் கடைகளில் 800-க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீர் என பல வகையான மதுபானங்கள் இங்கு கிடைக்கின்றன.

TASMAC New Brands

கிங்பிஷர், பிரிட்டிஷ் எம்பயர்

குறிப்பாக, கிங்பிஷர், பிரிட்டிஷ் எம்பயர், எஸ்.என்.ஜே. 10,000, கார்ல்ஸ்பெர்க், பட்வைசர் உள்ளிட்ட 21 வகையான பீர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு புதிதாக 20 மதுபான வகைகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக பிர்ரா, ஹெய்னகென் சில்வர், சிம்பா ரோர், லோன் உல்ப் ஆகிய 4 புதிய பீர் வகைகள் அறிமுகமாக உள்ளன. கர்நாடகம், சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து இவை கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த பீர்களின் விலை குறைந்தபட்சம் ரூ.250 இருக்கக்கூடும் என்கிறார்கள்.. முதலில் எலைட் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதால், பீர் வகைகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 25 ஆகப்போவதாக சொல்கிறார்கள்.

கூடுதல் ஸ்டாக்

தீபாவளி பண்டிகையை 3 நாட்கள் தொடர் விடுமுறையுடன் கொண்டாட பலரும் திட்டமிட்டு வருகிறார்கள்.. அதனால் வழக்கத்தைவிட மதுபான விற்பனை அதிகமாகவே இருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதனால்தான, தமிழகம் முழுவதுமுள்ள கடைகளில் நேற்று முதலே கூடுதல் மதுபானங்களை ஸ்டாக் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடையிலும் கஸ்டமர்கள் கேட்கும் மதுபான வகைகள் கிடைக்க வேண்டும் என்பதில் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது... இதற்காக மாவட்ட சூப்பர்வைசர்களுக்கு வாய்மொழியாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்..

கஸ்டமர்கள் கேட்கும் பிராண்டு

குறிப்பிட்ட ஒரு பிராண்டு வேண்டும் என்று யாராவது கஸ்டமர்கள் கேட்டால்,, ஸ்டாக் இல்லை என்றெல்லாம் திருப்பி அனுப்பிவிடக்கூடாது, அந்த அளவுக்கு ஸ்டாக்கில் அனைத்து பிராண்டுகளையும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இருந்தாலும், அனைத்து கடைகளிலுமே, அதிக அளவில் மதுபானங்களை ஸ்டாக்கில் வைத்து கொள்ள, போதுமான இடவசதி இல்லை என்கிறார்கள் ஊழியர்கள்.. அதிலும், அதிகமாக சேல்ஸ் நடக்கும் கடைகளில்கூட கூடுதல் மதுபாட்டில்களை வைப்பதற்கு இடமில்லாத நிலைமை உள்ளதாகவும், இதனால் மதுபானங்களை வைப்பதற்கு மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகிறார்கள்.

தற்காலிக ஊழியர்கள்

இதனிடையே, காலி மதுபாட்டில்கள் தொடர்பான விவகாரத்தில் சில சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. தீபாவளி நேரத்தில் விற்பனை அதிகரிக்கும்போது ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக ஊழியர்களை நியமிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

அதேபோல கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டங்களால், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.. எனவே அந்த இழப்பையும் ஈடுசெய்து, தீபாவளி விற்பனையை அதிகரிக்கவும் டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. இதனால் இந்த ஆண்டு தீபாவளி காலத்தில் மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+