தனுஷ் அரசியல் வருகை.. பெண்கள் வாக்குகள் சிதறிவிடுமோ.. தவெக அமைச்சர்கள் பதற்றம் அடைய காரணம் என்ன?

  • சென்னை: நடிகர் தனுஷின் டெல்லி பயணமும், அங்கு அவர் சந்தித்த அரசியல் பிரமுகர்களும் தவெகவினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்தியாவின் வெற்றி மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றி தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கப்படும். இதை உடைப்பதற்கு தான் புதிய நடிகர்கள் டெல்லியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது.

    Advertisement

    யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும். புதிது புதிதாக சைத்தானுடைய பிள்ளைகளை டெல்லியில் இருந்து பேக் செய்து அனுப்புகிறார்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என்று பேசியுள்ளார். அதேபோல் அமைச்சர்கள் மரிய வில்சன், பிரபு, செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட பலரைம் நடிகர் தனுஷை சீண்ட தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    மறுபக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் தனுஷை நாடி அதிமுக செல்லலாம்.. தனுஷும் அதிமுகவை நாடி வரலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் தெரிந்து தெரியாமலோ நடிகர் தனுஷை தமிழக அரசியலின் முக்கிய நபராக மாற்றிவிட்டனர் தவெக நிர்வாகிகள். ஆனால் தனுஷ் இதுவரை நடப்பதை சைலண்ட்டாக வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார்.

    நடிகர் தனுஷின் அரசியல் வருகையால் நேரடியாக பாதிக்கப்படப் போவது தவெக தான் என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். தவெகவின் வாக்குகள் நகரங்களில் தான் அதிகம் உள்ளது. 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களும், பெண்களும் அதிகமாக தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், இளைஞர்களின் வாக்குகளை தான் குறி வைப்பார்.

    Advertisement

    தனுஷ் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருப்பதால், அவருக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் 30 வயதினை ஒத்தவர்கள் தான். இளைஞர்களின் வாக்குகள் கொஞ்சம் பறிபோனாலும், அதனை அதிமுகவின் வாக்குகளை வைத்து தவெகவால் ஈடுகட்ட முடியும். ஆனால் பெண்களின் வாக்குகளை பறிகொடுத்தால், அது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறிவிடும்.

    அதிலும் அதிமுக போன்ற கட்டமைப்பு வலுவாக இருக்கும் கட்சியில் தனுஷ் இணைந்தால், தவெக அடையப் போகும் சேதாரத்தை சொல்லவே முடியாது. ஏனென்றால் புதிய வாக்காளர்களை கவர முடியாமல் அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும் திணறி வருகிறார்கள். அப்படியான புதிய வாக்காளர்களை தனுஷ் மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வர முடியும் என்பதால், தவெக தலைமை பதற்றம் அடைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Actor Dhanush Political Entry: Why TVK Ministers Are Worried About Splitting Women Votes