லட்சக்கணக்கில் வெளியேறும் மக்கள்.. தீபாவளி பண்டிகைக்காக சென்னையை காலி செய்தது எவ்வளவு பேர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மொத்தம் 2.59 லட்சம் பயணிகள் வெளியேறி உள்ளனர் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார். இதுதவிர தனியார் பஸ்கள், ரயில்கள் உள்பட பிற வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் நேற்று முதலே சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக கிளம்பி செல்கின்றனர்.

Tamil Nadu Transport Minister Parthiban

சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் கடும் கூட்டம் நெரிசல் உள்ளது. இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: '' இன்று காலை முதல் மாலை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 1,017 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் முன்பதிவு பேருந்துகளாக 250 பேருந்துகளும், சாதாரண பேருந்துகளாக 777 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 56 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 2.59 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆர்டிஓக்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்கள் இல்லை. இதற்கு முன்பு 2 முறை பஸ் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூடடம் நடத்தினோம். அதிக கட்டணம் வசூலித்ததாக 10 பேருந்துகள் பறிமுதல் செய்துள்ளோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+