கொந்தளிக்கும் அரபிக் கடல்.. வானளவு உயரும் வங்கக் கடலலை! மீனவர்களுக்கு வார்னிங்! அதென்ன கள்ளக்கடல்?

  • சென்னை: கன்னியாகுமரி மாவட்ட அரபிக்கடல் பகுதிகளில் கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான நாட்டு படகுகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இரண்டு நாட்கள் சைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் நேற்றிரவு முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 19ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடல் பகுதிகளில் 1.9 முதல் 2.1 மீட்டர் வரை உயரம் கொண்ட 17 முதல் 19 வினாடிகள் வரை அலைகள் நீடித்தது.

    Advertisement

    அதிக ஆற்றல் வாய்ந்த பேரலைகள் எழும் இந்த கள்ளக்கடல் நிகழ்வு என கடல் சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டு படகு மீனவர்கள் 19 மற்றும் 20 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்தது மீன்வளத்துறை,

    மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவும், படகுகள் ஒன்றோடு ஒன்று உரசாத வகையில் பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தவும் அறிவுறுத்தியது. இதனையடுத்து மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான படகுகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடரும் கள்ளக்கடல் நிகழ்வால் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    இதேபோல், தூத்துக்குடியிலும், விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்," கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும். இதன் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று இரவு (18/08/2026) முதல் நாளை நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் மட்டும் விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சும்மா பத்தாயிரம் மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    English Summary

    Kallakkadal triggers rough sea warnings in Tamil Nadu, with fishing banned in Kanyakumari and warnings issued for Thoothukudi fishermen.