ஜோதிகா மதம் மாறிட்டாங்களா? ஸ்காட்லாந்து 5 ஸ்டார் ரிசார்ட்தான்.. சர்ச் இல்லை! சூர்யா 60ம் கல்யாணம்?

  • சென்னை: "இன்று சூர்யா ரூ.50 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாக உள்ளார். தங்களது சொந்த உழைப்பில் வந்த பணத்தை குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக செலவிடுவதை நாம் தவறாகப் பார்க்கக் கூடாது. முகேஷ் அம்பானி தனது வீட்டு கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வந்தவர்களுக்கு பரிசளித்ததைப் போல, அவரவர் தகுதிக்கு ஏற்ப கொண்டாடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் 20 வருடங்கள் வெற்றிகரமாக இணைந்து வாழ்ந்ததை கொண்டாடும் விதமாக மீண்டும் ஒரு திருமண விழாவை நடத்தியுள்ளனர். இது குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    Advertisement

    சூர்யா - ஜோதிகா திருமணம்

    நமது சமூகத்தில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற தம்பதிகளுக்கு 60ம் கல்யாணம் செய்து வைப்பதை நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளும்போது, 20 ஆண்டுகள் வெற்றிகரமாக இணைந்து வாழ்ந்ததை நினைவுகூர்ந்து ஒரு தம்பதி மீண்டும் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லையே.. இந்த விழா எந்தவொரு சர்ச்சிலும் நடக்கவில்லை.. ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு 5 ஸ்டார் ரிசார்ட் பங்களாவில்தான் நடந்துள்ளது

    கிறிஸ்தவ முறைப்படி விழா நடந்ததாக தோன்றுவதால் சூர்யாவோ அல்லது ஜோதிகாவோ மதமாற்றம் அடைந்துவிட்டதாக பரவும் செய்திகள் தவறானவை... சூர்யா எப்போதும் போல இந்துவாகவும், ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகவுமே தொடர்கிறார்கள்.. இவர்களது காதலுக்கு சாதி, மத எல்லைகள் என்றுமே தடையாக இருந்ததில்லை.

    Advertisement

    பல நட்சத்திர ஜோடிகள்

    சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகளின் திருமண வாழ்க்கை 2 அல்லது 3 ஆண்டுகளிலேயே முறிந்து கோர்ட் வாசலை ஏறும் சூழலில், சூர்யா ஜோதிகா தம்பதி 20 ஆண்டுகளைக் கடந்து அதே அன்போடும் பாசத்தோடும் வாழ்வது மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.

    திருமணத்தில் ஆடம்பரமாக செலவு செய்வதற்கு பதில் ஏழைகளுக்கு, ஜோதிகா உதவி செய்திருக்கலாமே என்ற விமர்சனங்களில் எந்த நியாயமும் இல்லை. சூர்யா ஏற்கனவே அகரம் அறக்கட்டளை மூலமாக ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து, அவர்களை டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும், வக்கீல்களாகவும் உருவாக்கியுள்ளார்.. சிவகுமார் குடும்பத்தினர் தொடர்ந்து பல தொண்டுகளை செய்து கொண்டுதானிருக்கிறார்கள்..

    Advertisement

    50 கோடிக்கு மேல் சம்பளம்

    இன்று சூர்யா ரூ. 50 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாக உள்ளார். தங்களது சொந்த உழைப்பில் வந்த பணத்தை குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக செலவிடுவதை நாம் தவறாகப் பார்க்கக் கூடாது. முகேஷ் அம்பானி தனது வீட்டு கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வந்தவர்களுக்கு பரிசளித்ததைப் போல, அவரவர் தகுதிக்கு ஏற்ப கொண்டாடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

    சூர்யாவின் திரைப்பயணமும் இப்போது மிகப்பெரிய டாப்பில் உள்ளது. அவர் நடிப்பில் வெளியான கருப்பு படம், உலகம் முழுவதும் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. விஸ்வநாதன் சன்ஸ் படமும் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

    Advertisement

    சூர்யாவின் குடும்ப வாழ்க்கை

    அடுத்து மலையாள டைரக்டர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள "சீன்" படமும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சூர்யா, தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்திற்கு நகர்ந்துள்ளார். நல்ல எண்ணமும், கல்விச் சேவையும் செய்யும் சூர்யாவுக்கு குடும்ப வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Did Jyothika Convert to Christianity? Scotland 5-Star Resort, Not a Church.. Why Criticise Suriya’s Celebration?