அண்ணனா இருக்கேன்னு பெண்களை ஏமாத்தினது போதும்.. கடமையை செய்யுங்க விஜய்.. பொளந்து கட்டிய கனிமொழி

  • சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிறது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தவெக அதை சரி செய்யாமல் திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு அண்ணனாக இருக்கிறேன் என ஏமாற்றியது போதும். முதலில் கடமையையை செய்யுங்கள் என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக ஆட்சியில் அவர்களின் நிர்வாகிகளின் வீட்டில் இருந்து 135 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக கட்சியில் உள்ள பல பேர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதைத் திசை திருப்புதற்காக, குற்ற செயல்களை திசை திருப்பு பல விஷயங்களை கையில் எடுக்கிறார்கள்.

    Advertisement

    பெண்களுக்கு எதிரான வன்முறை

    10 நாட்கள் கழித்து திமுக கவுன்சிலர் முதலமைச்சர் பேசியதை யாரும் கண்டிக்கவில்லை என ஒரு அமைச்சர் இப்போது பதிவு போடுகிறார். உண்மைக்கு புறம்பாக ஒரு அமைச்சர் பொய் பேசுகிறார். அந்த மேடையிலேயே மாவட்ட செயலாளர் சேகர் பாபு என கூறினார். அப்படி பேசுவது நாகரீகம் இல்லை என்று நானும் அதே மேடையில் கண்டித்தேன். அதற்கு அவரை வழக்கு போட்டு கைது செய்ய முயற்சிக்கிறார்கள். உடல்நலம் சரியில்லாத பகுதி செயலாளர் மீதும் வழக்கு போட்டு கைது நடவடிக்கையில் உள்ளனர்.

    இவர்களை எதிர்த்து பேசும் பாஜக மீது நடவடிக்கை எடுப்பதற்கு தைரியம் இருக்கிறதா. ஒரு அமைச்சர் பொது வெளியில் பொய்யே பேசுகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தான் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. தவெகவில் உள்ளவர்களே பெண்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவு போடுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுகிறார்கள்.

    Advertisement

    கடமையை செய்யுங்க

    தவெக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் குற்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த துறை உள்ளது. அதைத் தடுப்பதற்கோ, குறைப்பதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை. சட்டமன்றத்தில் இதை பற்றி கேட்டால் பன்ச் டெய்லாக் பேசிவிட்டு, வேறு எதையோ பேசிவிட்டு முதலமைச்சர் கிளம்புகிறார். இதுதான் ஜனநாயகமா. இதற்கு தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தார்களா.

    ஒரு குழந்தை காணாமல் போய் இத்தனை நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை. புகார் கொடுப்பவர்களை காவல்துறை தவறாக பேசுகிறது. இதை கண்டுகொள்ளாமல், கவலைப்படாமல் முதலமைச்சர் ஆட்சி செய்கிறார். எந்த ஒரு ஆணும், பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அண்ணானாகவோ, யாராகவோ இருக்க வேண்டாம். நீங்கள் உங்கள் கடமையை செய்தால் போதும். அண்ணனாக இருக்கிறேன், சீர் தருகிறேன் என்று ஏமாற்றியது போதும். காவல்துறை கடமையை செய்யுமளவுக்கு உங்கள் நிர்வாகத்திறமையை வளர்த்து கொள்ளுங்கள்" என்றார்.

    English Summary

    DMK Kanimozhi said, No need safeguard women. Let CM Vijay first do his duty.