ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா ஆரம்பம்.. சென்னை அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்

  • சென்னை: திமுகவின் முப்பெரும் விழா தற்போது வெகு பிரம்மாண்டமாக துவங்கி உள்ளது.. திமுக கழகத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பிரம்மாண்ட விழா ஆரம்பமாகியிருக்கிறது.. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெற்று வரும் விழாவில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    Advertisement

    செப்டம்பர் மாதம் வந்தாலே திமுகவில் களைகட்டும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது முப்பெரும் விழா. அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    Advertisement

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா சென்னை அறிவாலயத்தில் கடந்த 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், விழா நடைபெற இருந்த நேரத்தில் திமுக தலைவர் .ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று செப்டம்பர் 19-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு திமுக முப்பெரும் விழா துவங்கியிருக்கிறது.

    Advertisement

    இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதில் யார் யாருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

    திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்:

    பெரியார் விருது - விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
    அண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்
    கலைஞர் விருது - துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
    பாவேந்தர் விருது - மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
    பேராசிரியர் விருது - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
    மு.க.ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா

    Advertisement

    இதுதவிர, முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப. திருமாவேலனுக்கு வழங்கப்பட உள்ளது.

    கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த விழா, இன்று மாற்று தேதியில் நடக்கிறது. ... இதையொட்டி அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது.. தமிழகம் முழுவதிலிருந்து திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் சென்னையில் திரண்ட நிலையில், இப்போது விழா துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

    English Summary

    DMK Mupperum Vizha Today.. Who Are the 7 Leaders Set to Receive Awards from Stalin?