பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் 34 கோடி பேருக்கு 8.25% வட்டி தள்ளிப்போவது ஏன்? பின்னணி காரணம் இதுதான்

  • சென்னை: வருங்கால வைப்பு நிதி என்ற பிஎஃப் (EPF) என்பது, மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் பிடிக்கப்படுகிறது. இந்தச் சேமிப்புத் தொகைக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது. அந்த வகையில், 2025-2026ம் ஆண்டிற்கான 8.25 சதவீத வட்டிப் பணத்தை ஊழியர்களின் கணக்கில் சேர்க்கும் பணியை பிஎஃப் நிறுவனம் (EPFO) தொடங்கிவிட்டது. அதை பற்றின தகவல்தான் தற்போது வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்திய முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனியார் மற்றும் அரசு துறை ஊழியர்கள், தங்களது வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் 2025-26 நிதியாண்டுக்கான வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்த்து பாஸ்புக்கை தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசும் தொழிலாளர் நல அமைச்சகமும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளன.

    Advertisement

    2025-26 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டித் தொகையை உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கும் பணியை EPFO அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

    இருந்தாலும், நாட்டில் உள்ள சுமார் 34 கோடி PF உறுப்பினர் கணக்குகளில் பலருக்கு இன்னும் வட்டி வரவு விவரம் பாஸ்புக்கில் காட்டப்படவில்லை. இதனால், "வட்டி எப்போது வரும்? தாமதமானால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? ஒருவேளை வட்டித் தொகை குறைந்துவிடுமா?" என்ற பயமும் சந்தேகமும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

    வட்டிப் பணம் ஏன் இன்னும் வரவில்லை?

    இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அதில், "நாடு முழுவதும் உள்ள 34 கோடி பிஎஃப் கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் 1.44 லட்சம் கோடி ரூபாய் வட்டிப் பணத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். இது மிகப் பெரிய பணி என்பதால், ஒரே நாளில் அனைவருக்கும் வட்டியை அனைத்து கணக்குகளிலும்

    Advertisement

    ஒரே நேரத்தில் வரவு வைக்க முடியாது. அதனால், பகுதி பகுதியாகவே பணத்தை அப்டேட் செய்து வருகிறார்கள். ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்த வேலை நடந்து வருகிறது. உங்கள் பாஸ்புக்கில் வட்டி வரவு விவரம் தோன்ற சில நாட்கள் தாமதமாகலாம்" என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பிஃஎப் கணக்கு

    எனவே, உங்களுக்கு நஷ்டம் நிச்சயமாக இல்லை. உங்கள் பாஸ்புக்கில் வட்டிப் பணம் காட்ட தாமதமானாலும், உங்களுக்குச் சேர வேண்டிய முழு வட்டிப் பணமும் கண்டிப்பாக வந்து சேரும்.

    பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு, நிதியாண்டு முடிவில் உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதனால் வட்டி விவரம் உங்களுக்கு இன்றே தெரிந்தாலும் அல்லது இரண்டு மாதம் கழித்துத் தெரிந்தாலும், உங்களுக்கு வர வேண்டிய வட்டித் தொகையில் ஒரு பைசா கூட குறையாது.

    Advertisement

    வாடிக்கையாளர்கள் செய்யக் கூடாத தவறு

    இந்த நேரத்தில் பிஎஃப் உறுப்பினர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். உங்கள் கணக்கில் வட்டிப் பணம் ஏறுவதற்கு முன்பாக, அவசரப்பட்டு பிஎஃப் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் எடுத்து கணக்கை மூடிவிடக் கூடாது.

    பிஎஃப் கணக்கை மூடவோ அல்லது முழுத் தொகையை எடுக்கவோ திட்டமிட்டிருந்தால், அந்த ஆண்டிற்கான வட்டி வரவு தொடர்பான விதிமுறைகளை முதலில் சரிபார்ப்பது நல்லது. தேவையெனில் EPFO அலுவலகத்திலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    வட்டி வந்ததை எப்படிச் சரிபார்ப்பது?

    உங்கள் மொபைலில் "உமாங்" (UMANG) செயலி மூலமாகவோ அல்லது பிஎஃப் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றோ உங்கள் பாஸ்புக்கைச் சரிபார்க்கலாம். உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்து பாஸ்புக்கைப் பார்த்தால், வட்டி சேர்ந்த விவரத் தகவல் இருக்கும்.

    Advertisement

    அதனால் உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி இன்னும் வரவு ஆகவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய முழு வட்டியும் கணக்கிட்டு வரவு வைக்கப்படும்...!!

    English Summary

    EPF Interest Delay.. Why Is 8.25% Interest Yet to Be Credited for 340 Million PF Account Holders? Here's the Reason