நடிகை கவுதமியிடம் நில மோசடி+ சட்டவிரோத பணப்பரிமாற்றம்.. தொழிலதிபர் அழகப்பனை கைது செய்த அமலாக்கத்துறை

  • சென்னை: நடிகை கவுதமி நில மோசடி வழக்​கில் தொழில​திபர் அழகப்​பன் கைது செய்​யப்​பட்​டார். கவுதமி அளித்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் கௌதமி. இவர், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு கௌதமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.

    Advertisement

    கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகை கவுதமி சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் ஒன்றை அளித்​தார். அதில், சென்னை வேளச்​சேரியைச் சேர்ந்த அழகப்​பன், ஸ்ரீபெரும்​புதூரில் தனக்கு சொந்​த​மான ரூ.25 கோடி மதிப்​புள்ள 46 ஏக்​கர் நிலத்தை ஏமாற்றி தன்​வசப்​படுத்​திக் கொண்​ட​தாக குறிப்​பிட்​டிருந்​தார்.

    அந்​தப் புகாரின் அடிப்​படை​யில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீசார் விசா​ரணை நடத்தி அழகப்​பனை கைது செய்​தனர். முதற்​கட்ட விசாரணையில், இந்த நில மோசடி​யில் பெரும் அளவில் சட்​ட​விரோத பணப் பரிமாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தது.

    இதையடுத்​து, மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சாரின் பரிந்​துரை​யின் பேரில், அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் இந்த வழக்கை கையில் எடுத்​தனர். கடந்த ஜூன் மாதம் அழகப்​பனுக்​கு தொடர்​புடைய 6 இடங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

    Advertisement

    அப்​போது கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களின் அடிப்​படை​யில், விசா​ரணைக்கு ஆஜராகும்​படி அழகப்​பனுக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டது. அதன்​படி, நேற்று சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் அழகப்​பன் விசாரணைக்கு ஆஜரா​னார்.

    அழகப்பனிடம் அதி​காரி​கள் நடத்​திய நீண்ட நேர விசா​ரணைக்​குப் பிறகு, நேற்று மாலை அவர் கைது செய்​யப்​பட்​டார். மேலும், இந்த வழக்​கில் தொடர்புடைய மற்ற நபர்​களை​யும் கைது செய்ய அமலாக்​கத்​துறை தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Businessman Alagappan has been arrested in connection with a land fraud case involving actress Gautami. Following a complaint lodged by Gautami, the Enforcement Directorate had registered a case and was conducting an investigation; he was arrested yesterday after being questioned.