சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பாராத மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. சமீப காலமாகவே சில இளம்பெண்கள் போதையில் நடமாடும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.. நேற்று சென்னையின் திருவல்லிக்கேணியில் நடந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது..!!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள டாக்டர் நடேசன் சாலையில் இரவு நேரம் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.. அப்போது, அந்த பகுதியிலுள்ள ஒரு பிரபல ரெஸ்ட்டாரண்டிற்கு இளம் காதல் ஜோடி ஒன்று வந்துள்ளது.
அப்போது காதலனுடன் சாப்பிட வந்திருந்த பெண், ஏற்கனவே கடுமையான மதுபோதையில் தள்ளாடியபடி காணப்பட்டார்.. மொத்தமாக நிதானம் இழந்து காணப்பட்டார்.. ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்ததில் இருந்தே அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் வித்தியாசமாகவே தென்பட்டது.. அங்கிருந்தவர்களை முகம் சுளிக்கும் வகையில் அந்த நடந்து கொண்டது,பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ரெஸ்ட்டாரண்டிலிருந்து வெளியே வந்த பிறகும் அந்தப் பெண்ணின் அராஜகம் குறையவில்லை. ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளைப் பார்த்து அந்தப் பெண் திடீரென ஆபாசமான வார்த்தைகளால் மிகவும் தரக்குறைவாகத் திட்டி ரகளையில் ஈடுபடத் தொடங்கினார். சாலையில் அமைதியாக சென்றுகொண்டிருந்தவர்கள் இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டு திகைத்து போய் நின்றார்கள்.. ஒரு பெண் பொதுவெளியில் இப்படி அநாகரீகமான முறையில் நடந்துகொள்வதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது ரகளை அத்துடன் நிற்கவில்லை.. அந்த வழியாக சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது தனது கோபத்தை காட்டிய அந்தப் பெண், திடீரென அந்த காரை தனது காலால் ஓங்கி எட்டி உதைத்தார்.. இதை பார்த்து கோபமடைந்த பொதுமக்கள், அந்த பெண்ணை சூழ்ந்துகொண்டனர். பொதுவெளியில் இப்படி அத்துமீறி நடந்துகொள்கிறீர்களே என்று அந்தப் பெண்ணை தட்டிக்கேட்க முற்பட்டனர். ஆனால், தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களை பார்த்து கொஞ்சமும் பயப்படாமல், மதுபோதையில் இருந்த அந்த இளம்பெண், அவர்களையும் கெட்ட வார்த்தைகளில் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது அங்கிருந்தவர்களின் கோபத்தை மேலும் தூண்டியது. இதனால் 2 தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.. ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தார். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணி வீதியே அல்லோலகல்லோலப்பட்டது. இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக ரிக்கார்டு செய்து, சோஷியல் மீடியாவல் அப்லோடு செய்தனர்.. இந்த வீடியோ சிறிது நேரத்தில் வைரலானதையடுத்து, ஐஸ் அவுஸ் போலீசாரின் கவனத்துக்கும் சென்றது.. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்து தர்ம அடி வாங்கிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர். பிறகு பொதுமக்களையும் அங்கிருந்து கலைந்துபோகுமாறு அறிவுறுத்தினார்கள்.. மீட்கப்பட்ட பெண்ணை ஐஸ் அவுஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. ஆனால், அந்த பெண்ணின் போதை அப்போதும் தெளியவில்லை என்பதால், அந்தே நள்ளிரவு நேரத்திலும் பெண்ணின் பெற்றோரை ஸ்டேஷனுக்கு வரவத்தனர். பொது இடத்தில் மதுபோதையில் இதுபோன்று இனி தவறாக நடந்துகொள்ளக் கூடாது, மீண்டும் இப்படி நடந்து கொண்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, அந்தப் பெண்ணை அவரது பெற்றோருடன் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் புழல் காவாங்கரை பகுதியில் மதுபோதையில் 2 இளம் பெண்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு ஓய்வதற்குள், தற்போது ஐஸ் ஹவுஸ் பகுதியிலும் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி இளம்பெண்களும் மதுபோதையில் பொதுவெளியில் கட்டுப்பாடின்றி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது...!!மதுபோதையில் இளம்பெண்
ஐஸ் ஹவுஸ் போதைப் பெண்
கெட்ட வார்த்தையில் திட்டிய பெண்
போலீஸ் வார்னிங்
புழல் பகுதியில் 2 பெண்கள்