குரூப்- 4 விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முக்கியமான கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 8-ம் தேதி கடைசி நாள் என்று நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக 6,574 காலிப்பணியிடங்களுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். இந்த சூழலில் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதும் செய்ய விரும்பினால் இன்று 11-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம். திருத்தம் செய்ய இன்று தான் கடைசி நாளாகும். 2027 ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. 2 வாரங்களுக்கு முன்பாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

tnpsc group 4 4

தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்களின் கனவு என்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெல்வது தான். குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. இதில் அதிகப்படியான அரசு வேலை என்பது குரூப் 4 தேர்வுகளில் வெல்பவர்களுக்கு தான் கிடைக்கும்.
அதனால் குரூப் 4 குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அதிகம்.

2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6ம் தேதி வெளியாகி இருந்தது. 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர், 1,572 தட்டச்சர் 404 சுருக்கெழுத்து தட்டச்சர், 60 நேர்முக எழுத்தர், 40 வனக்காவலர் மற்றும் முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் என மொத்தம் 6 ஆயிரத்து 574 குரூப் 4 காலி இடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பலரும் விண்ணப்பித்து வந்தார்கள்.

இதனிடையே அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பை தமிழக அரசு அண்மையில் அதிகரித்தது. இதன் காரணமாக அவர்களும் விண்ணப்பித்தார்கள். இதனால் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் கடந்த 8-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளனர் . விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று முக்கியமான கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினால் இன்று தான் கடைசி நாள் ஆகும். நள்ளிரவு நள்ளிரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம். குரூப் 4 பணிக்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ந் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+