பள்ளி மாணவர்களுக்கு குஷி.. இடைத்தேர்தல் காரணமாக 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கெனவே காலாண்டு விடுமுறையில் உள்ள அந்த தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

    அதைத்தொடர்ந்து, அக். 6 (செவ்வாய்க்கிழமை) இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 9 (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை விடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக செயல்படுவதால், அதற்கான ஏற்பாடுகளுக்காக 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலாண்டு விடுமுறையில் உள்ள அந்த தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், இடைத்தேர்தலையொட்டி 6 ஆம் தேதி இரண்டு தொகுதிகளுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதியிலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியிலும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மேற்கண்ட இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 6 ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், அரசு தொழில் நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    The respective district administrations have announced a holiday for all schools in the Maduranthakam and Dharapuram constituencies on October 5 and 6. With the by-election polling scheduled for October 6, the preceding day has also been declared a holiday.