பிறந்த நாள் பரிசாக தந்தைக்கு ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கி கொடுத்த திமுக எம்எல்ஏ! பின்னணி

  • சென்னை: திருச்சி மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கதிரவன் தனது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக ரூ.40 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை வழங்கியுள்ளார். தமிழகத்தில் பிரபலமாக உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தை சேர்ந்த கதிரவன், தனது தந்தைக்கு பிரமாண்டமாக பரிசு அளித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    Advertisement

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் கதிரவன். இவரது தந்தை சீனிவாசன். பெரும் தொழிலதிபரான சீனிவாசன், தமிழகத்தில் பிரபலமாக உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் நிறுவனராக உள்ளார்.

    Advertisement

    ஹெலிகாப்டரை பரிசாக கொடுத்த மகன்

    மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி சர்க்கரை ஆலை, சிட்பண்ட்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்துடன் உள்ளது. பெரும் தொழிலதிபரான கதிரவன் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஆடம்பர கார்களையும் வைத்துள்ளார். சீனிவாசன் கடந்த வாரம் தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

    வானதி சீனிவாசன் கையிலெடுத்த சேலம் ரேஷன் அரிசி.. கூட்டுறவு அங்காடிகளில் இதுதான் நடக்கிறதா

    தனது தந்தை பிறந்த நாளை மிகவும் பிரமாண்டமாக திமுக எம்.எல்.ஏ கதிரவன் கொண்டாடினார். இதற்காக பெரம்பலூரில் உள்ள தனது கல்லூரி வளாகத்தில் 30 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. பிறந்த நாள் விழாவும் அங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா முடிவின் போது, தனது தந்தை சீனிவாசனுக்கு ஹெலிகாப்டர் ஒன்றை கதிரவன் பரிசக அளித்தார்.

    Advertisement

    சமூக வலைத்தளத்தில் வைரல்

    ரூ 40 கோடி மதிப்பு கொண்ட அந்த ஹெலிகாப்டர் 5 பேர் பயணிக்க கூடியதாகும். பிறந்த நாள் பரிசாக விலை உயர்ந்த கார்களை பரிசாக அளித்து இருப்பதை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம். தந்தைக்கு ஹெலிகாப்டரே பரிசாக கொடுத்துவிட்டாரே என பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களும் வியப்புடன் பேசிக்கொண்டதை பார்க்க முடிந்தது.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.. வி த லீடர்ஸ் அமைப்பின் அடுத்தடுத்த பிளான் என்ன? அறிவித்த அண்ணாமலை

    தற்போது மகன் பரிசாக அளித்த ஹெலிகாப்டரில் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு சீனிவாசன் விசிட் அடித்து வருகிறாராம். சமயபுரம், பழனி, கொடைக்கானல், ஊட்டி, கேரளா போன்ற நகரங்களுக்கு சீனிவாசன் சென்று வரும் நிலையில், ஹெலிகாப்டர் பரிசாக அளித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    கதிரவன் சொத்து மதிப்பு எவ்வளவு?

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எம்.எல்.ஏவாக இருப்பவர் கதிரவன். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன்னிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ.153.5 கோடி என தெரிவித்து இருந்தார்.

    ரூ.37.5 கோடி கடன் இருப்பதாகவும், ஆண்டு வருமானம் ரூ.3.6 கோடி என்றும் வேட்பு மனுவில் கூறியிருந்தார். சட்டமன்ற தேர்தலில் கதிரவன் மணச்சநல்லூர் தொகுதியில் 12,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கதிரவன் 81,447 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை தவெக பிடித்தது.

    English Summary

    Kathiravan, the DMK MLA for the Manachanallur constituency, has gifted a helicopter worth Rs. 40 crore to his father for his birthday. Kathiravan, who is associated with the well-known Dhanalakshmi Srinivasan group of educational institutions in Tamil Nadu, has left many astonished by presenting such an extravagant gift to his father.