பென்ஷன் வாங்குறீங்களா? வங்கிக்கு போகாமலே வீட்டில் இருந்தே உயிர் சான்றிதழ் கொடுக்க 3 வழிகள் இதுதான்

  • சென்னை: ஓய்வூதியம் வாங்குபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு முக்கியமான வேலையை செய்ய வேண்டும். அதுதான் உயிர் சான்றிதழ் சமர்ப்பிப்பது. இதை செய்யவில்லையென்றால், பென்ஷன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆனால், இதற்காக வயதானவர்கள் வங்கிக்கும், அலுவலகத்துக்கும் நேரில் சென்று சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த வேலையை முடிக்க முடியும். அது எப்படி தெரியுமா?

    Advertisement

    ஓய்வூதியம் வாங்கும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்வதற்காகவே கேட்கப்படும் சான்றிதழ் உயிர்ச்சான்றிதழ்... இதை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) மூலம் ஓய்வூதியம் வாங்குபவர்களும் இதை கவனிக்க வேண்டும்.

    Advertisement

    உதாரணமாக, கடந்த வருடம் அக்டோபர் 20-ம் தேதி உயிர் சான்றிதழ் சமர்ப்பித்திருந்தால், அடுத்த வருடம் அக்டோபர் 19-ம் தேதிக்குள் மீண்டும் சமர்ப்பிப்பது அவசியம். காலதாமதம் ஏற்பட்டால் ஓய்வூதியம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    உயிர் சான்றிதழ் - 3 சிம்பிள் வழி

    வீட்டிலிருந்தபடியே உயிர்ச் சான்றிதழ் சமர்ப்பிக்க 3 எளிய வழிகள் இருக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

    முதல் வழி, தபால்காரர் மூலம் உயிர் சான்றிதழ் சமர்ப்பிப்பது. இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) சேவையை பயன்படுத்தினால், தபால்காரர் உங்கள் வீட்டுக்கே வந்து இந்த வேலையை செய்து கொடுப்பார்.

    Advertisement

    ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய ஆணை எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். கைரேகை பதிவு செய்த பிறகு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும். இதற்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. PostInfo செயலி மூலமாகவோ, 033-22029000 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ இந்த சேவையை கேட்கலாம்.

    'இந்திரா காந்தி’ பெயரே இருக்கக்கூடாது.. பென்ஷன் திட்டங்களில் தூக்கியெறிந்த மோடி! கேபினட் ஒப்புதல்

    ஸ்மார்ட் போன்

    2வது வழி, உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே சான்றிதழை சமர்ப்பிப்பது. ஆண்ட்ராய்டு போனில் Jeevan Pramaan செயலி மற்றும் AadhaarFaceRD செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, போனின் முன்பக்க கேமரா மூலம் உங்கள் முகத்தை படம் பிடித்து சரிபார்ப்பு செய்யலாம். இதற்கு கைரேகை பதிவு செய்யும் கருவி தேவையில்லை. இணைய வசதியும் இருக்க வேண்டும்.

    Advertisement

    3வது வழி, வங்கியின் வீட்டு சேவையை பயன்படுத்துவது. பொதுத்துறை வங்கிகள் இணைந்து வழங்கும் Doorstep Banking சேவை மூலம், அங்கீகரிக்கப்பட்ட வங்கி முகவரை வீட்டுக்கு வரவழைக்கலாம். அவர் தேவையான விவரங்களை சரிபார்த்து உயிர் சான்றிதழை சமர்ப்பிக்க உதவுவார். அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது இ-சேவை மையத்துக்கும் சென்று இந்த வேலையை செய்து கொள்ளலாம்.

    மாற்றுத்திறனாளிகள் பென்ஷன்.. 40% பாதிப்பு இருந்தாலே கிடைக்குமா? மத்திய அரசு போட்ட புது கணக்கு

    தேவையான ஆவணங்கள்

    ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஓய்வூதிய ஆணை எண் (PPO), வங்கி கணக்கு எண், IFSC குறியீடு உள்ளிட்ட விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    Advertisement

    சான்றிதழ் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், Pramaan ID எனப்படும் அடையாள எண்ணுடன் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    மத்திய அரசு, மாநில அரசு, ராணுவம் மற்றும் EPFO மூலம் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு இந்த வசதி உதவும். வயதானவர்கள் தேவையில்லாமல் அலையாமல், தங்களுக்கு வசதியான வழியில் உயிர் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

    English Summary

    Pensioners Can Submit Digital Life Certificate at Home Without Visiting Bank: 3 Easy Ways