ஏற்காட்டில் 2 உடல் மீட்பு.. பெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்ற வழக்கின் ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கார் டிரைவராக இருக்கும் இந்து சேகர் தனது மனைவி, மாமியார் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்து உடலை ஆங்காங்கே வீசிய சம்பவம் மொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் அவரது மனைவி மற்றும் மாமியாரின் உடல்கள் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இன்னும் 4 பேரின் உடல்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

bengaluru-mass-murder-case-police-recover-accussed-wife-mother-in-law-bodies-at-yercaud-in-tamil

பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள பார்சியம் சர்க்கிளில் வசித்து வருபவர் இந்து சேகர். இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி மற்றும் அவரது மொத்த குடும்பத்தையும் கொன்றுள்ளார். மொத்தம் 7 பேரை தீர்த்து கட்டி உள்ளார்.

கர்நாடகா மட்டுமின்றி மொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கி போட்டுள்ளது. இந்து சேகர் தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி, மனைவி சுனிதாவின் சகோதரர்களான சிவக்குமார், சங்கர், அவர்களின் மனைவிகள் திவ்யா (2 பேரின் பெயர்களும் திவ்யா) மற்றும் சுனிதா சகோதரரின் 7 வயது மகன் புனித் என மொத்தம் 7 பேரையும் கொன்றுள்ளார்.

அதன்பிறகு அவர்களின் உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசி உள்ளார். இந்து சேகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது 18 வயது நிரம்பாத மகளுக்கும் இந்த கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது போலீசார் 7 பேரின் உடல்களையும் தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி பெங்களூர் அருகே உள்ள நந்தி மலையில் 7 வயது சிறுவன் புனித்தின் உடல் மீட்கப்பட்டது. இந்து சேகர் கொடுத்த தகவலின்படி இந்த உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று 2 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அது இந்து சேகரின் மனைவி சுனிதா மற்றும் மாமியார் ரூபாவதியின் உடல்கள் ஆகும். இவர்கள் 2 பேரின் உடல்களும் பாலித்தீன் கவர் மற்றும் துணிகளால் சுற்றப்பட்டு ஏற்காடு மலைப்பாதையின் ஓரத்தில் வீசப்பட்டு கிடந்தது. உடல்கள் அழுகிய நிலையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொலையில் இன்னும் 4 பேரின் உடல்கள் எங்கே? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக இந்து சேகரிடம் போலீசார் தொடர்ந்து விசாரைண மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்து சேகருக்கும், சுனிதாவுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் பியூசி கல்லூரியில் படித்து வருகிறார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சுனிதாவிற்கு ஆதரவது அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து சேகர் கடந்த அக்டோபர் 16ம் தேதி தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்றுள்ளார். அதன்பிறகு அவர்களின் உடல்களை ஏற்காட்டில் வீசி உள்ளார். பிறகு சுனிதாவின் 2 சகோதரர்கள், அவர்களின் மனைவி, அவர்களின் ஒரு மகன் உள்ளிட்டோரை விருந்துக்கு அழைத்து அடுத்தடுத்து கொன்று உடல்களை மலைப்பகுதிகளில் வீசி நாடகமாடி தற்போது சிக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+