Motels: நெடுஞ்சாலைகளில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களுக்கு இ-டெண்டர் வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்களுக்கான இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மோட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து நீண்ட தூரம், அதாவது 3 மணி நேரத்திற்கு மேல் இயக்கப்படும் பேருந்துகள் நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்பட்டு பயணிகள் உணவு மற்றும் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவார்கள்.

Tamil Nadu Government Invites E-Tenders for Government Bus Route Motels

அரசு பேருந்துகள் சில குறிப்பிட்ட உணவங்களில் மட்டுமே நிறுத்தப்படும். அந்த உணவகங்கள் அரசு மூலம் டெண்டர் விடப்படும். அந்த வகையில் தற்போது, மோட்டல்களுக்கான இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மோட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. சுத்தமான கழிப்பறை, தரமான உணவு, இலவச குடிநீர், மொபைல் சார்ஜிங், சிசிடிவி கேமரா மற்றும் பயணிகள் ரேட்டிங் வழங்க QR Code உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடிப்படை வசதிகள் குறித்து 5-க்கு 2-க்கு கீழ் Rating எனில் 10 நாட்களில் சரிசெய்ய அவகாசம் வழங்கப்படும். அதற்குள் சரி செய்யாமல் தொடர்ந்தால் டெண்டர் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் புகார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுகளின் அடிப்படையில், தரமற்ற வகையில் விதிமுறைகளை மீறிச் செயல்படும் நெடுஞ்சாலை உணவகங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+