வழிக்கு வந்த டிரம்ப்! சீனாவுடன் முக்கிய பேச்சுவார்த்தை! ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பும் உலகம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்சி தோல்வியடைந்திருக்கும் நிலையில், தற்போது சீனாவுடன் முக்கிய பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இறங்கி வந்திருக்கிறார்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா பிரச்சனை, வேலை இருந்தாலும் போதுமான அளவுக்கு சம்பளம் இல்லாதது.. இதெல்லாம் அமெரிக்க மக்களை ரொம்பவே சூடாக்கியது. இது போதாது என.. சீனாவுடன் பஞ்சாயத்து, ஈரானுடன் ஏழரை, உக்ரைனுக்கு குத்துவிடுவது என ஏகப்பட்ட சலசலப்புகள்.

US China trade

ஒரு கட்டம் வரைக்கும் பார்த்த அமெரிக்க மக்கள்.. இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைத்து மொத்தமாக டிரம்புக்கு எதிராக ஓட்டு போட்டுவிட்டார்கள். அப்புறம் என்ன? அவரது கட்சி தேர்தலில் தோற்றுவிட்டது. இதையடுத்து, தேர்தலுக்கு பின்னர் அவர் எடுக்கும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. குறிப்பாக சீன விஷயத்தில், கொஞ்சம் பாசிட்டிவாக யோசிக்க தொடங்கியிருக்கிறார்.

அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தக உறவை சுமுகமாகவும், நேர்மையாகவும் மாற்றுவதற்கு பேச்சுவார்த்தைகளை தொடர ஒப்புக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு டிரம்ப் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட 'புசான் வர்த்தக ஒப்பந்தத்தில்' (Busan Deal) சொல்லப்பட்டிருப்பதை முழுமையாக சீனா நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தற்போது இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் சீனாவின் துணை பிரதமர் ஹே லிஃபெங் ஆகியோருக்கு இடையே நேற்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதிகளை சீனா உடனடியாகவும், முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும் என்றும்.. இரு நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் இதன் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது எனவும் பேசப்பட்டிருக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின்படி, சீனா தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று அமெரிக்கா மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.

1. முதல் குற்றச்சாட்டு, ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அரிய வகை கனிமங்கள் விநியோகத்தில் சீனா வெறும் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அமெரிக்காவுக்கு வழங்குகிறது என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த சந்திப்பில்.. இந்த விவகாரம் நேரடியாக பேசப்பட்டும், சீனா விநியோகத்தை அதிகரிக்கவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

2. இரண்டாவது குற்றச்சாட்டு வேளாண் பொருட்கள் கொள்முதல் தொடர்பானதாகும். அதாவது சோயாபீன்ஸ் வாங்குவது தொடர்பான வாக்குறுதியை சீனா நிறைவேற்றி இருந்தாலும்.. பிற விவசாய பொருட்களை வாங்குவதில் சீனா ஆர்வம் காட்டவில்லை என அமெரிக்கா கருதுகிறது.

3. மூன்றாவது குற்றச்சாட்டு, ஜப்பானுக்கான ஏற்றுமதி தடை தொடர்பானதாகும். ஜெட் என்ஜின்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய 'இட்ரியம்' எனப்படும் அரிய வகை கனிமத்தை, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதால்.. அங்கு கனிமத்தின் இருப்பு ஆபத்தான நிலைக்கு குறைந்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கூடுதல் கவலை ஏற்படுத்துள்ளது.

இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்.. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப் முன் வந்திருப்பதை பலரும் வியப்பாக பார்க்கின்றனர். அமெரிக்காவின் ஸ்டைலே துப்பாக்கிதான். ஆனால், தேர்தலில் விழுந்த அடி.. டிரம்ப் நிர்வாகத்தை பேச்சுவார்த்தையை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+