லீவு முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

  • சென்னை: சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி என 4 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு மக்கள் இன்று சென்னை திரும்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    விடுமுறை தொடங்கும்போது, சென்னையிலிருந்து புறப்படும் வாகனங்களும், விடுமுறை முடியும்போது சென்னைக்கு வரும் வாகனங்களும் நெரிசலில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது.

    Advertisement

    அந்த வகையில் இன்று காலை சென்னை நோக்கிய அதிக அளவில் வாகனங்கள் வந்ததால், வண்டலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து வந்தன. ஆம்னி பேருந்துகளின் அதிக எண்ணிக்கை, கார்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனர். இதில் ஆம்னி பேருந்துகளை கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம்.. ஆனால், கார்களின் எண்ணிக்கைதான் ரொம்பவும் அதிகரித்துவிட்டது.

    சென்னையில் டிராபிக் ஜாம் ஏற்பட முக்கிய காரணம் கார் போன்ற தனியார் வாகனங்கள்தான். 2 பேருக்கு ஒரு கார், 4 பேருக்கு ஒரு கார் என்று பயன்படுத்தப்படும்போது, 1,000 பேருக்கு 250 முதல் 500 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்சம் 250 கார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அது சாலையில் 2.5 கி.மீ தூரத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

    Advertisement

    அதுவே பேருந்தை பயன்படுத்தும்போது 1,000 பேருக்கு 20-25 பேருந்துகளே போதுமானதாக இருக்கின்றன. இந்த பேருந்துகள் வெறும் 300 மீ மட்டுமே சாலையை ஆக்கிரமிக்கின்றன. எனவே பொதுமான அளவுக்கு பேருந்துகளை இயக்குவதை உறுதி செய்வது, அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதியை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலே மக்கள் முழுமையாக பேருந்துகளை நம்பி பயணிப்பார்கள். எனவே கார்களுக்கான தேவை குறையும். இப்படிதான் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று பலரும் கூறுகின்றனர்.

    பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ.. அதே அளவுக்கு பண்டிகை நாட்களில் போதுமான அளவுக்கு ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இதை செய்யலாமல், புதிய சாலைகளை அமைப்பது, மேம்பாலங்களை கட்டுவதால் மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையான தீர்வை காண முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்..

    Advertisement

    புதியதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இந்த விஷயத்தை எப்படி அணுக போகிறது? என்பது கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    GST Road: People are returning to Chennai today following a four-day break, which included the weekend as well as the Saraswati Puja and Vijayadashami holidays. With thousands of vehicles heading towards Chennai simultaneously, severe traffic congestion has occurred.