இன்று உதயநிதிக்காக வந்த சபரீசன்.. அன்று கருணாநிதிக்காக வந்த முரசொலி மாறன்.. என்ன நடந்தது?

  • சென்னை: இன்று திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், அவதூறு பேச்சுக்காக தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய விடமால் முன்னாள் அமைச்சர்கள் சேகர் பாபு, எவ வேலு உள்பட, மா சுப்பிரமணியன் பலரும் குவிந்தனர். உதயநிதியின் இல்லத்திற்கு சபரீசனும் வருகை தந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாக, முன்னதாக திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி 2001ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்டார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் விரைந்து வந்த கைதுக்கு எதிராக கடுமையான எதிர்வினையாற்றினார்.

    Advertisement


    முரசொலி மாறனுக்கு அன்று என்ன நடந்தது

    2001 ஜூன் 30ம்தேதி அன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாக போடப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்ய அவரது வீட்டிற்குள் காவல்துறை அதிரடியாகப் புகுந்தது. இதுகுறித்து திடீரென தகவல் வந்த நிலையில், அப்போது மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் விரைந்து சென்றார்.

    Advertisement

    அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் முரசொலி மாறன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களைக் நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாக, நள்ளிரவில் இழுத்துச் செல்ல பார்க்கிறீர்கள் என்று கூறி, முரசொலி மாறன் அவர்களைத் தடுக்க முயற்சி செய்தார்.
    "ஒரு முன்னாள் முதல்வரை, வயதா தலைவரை எப்படி இப்படித் தரதரவென இழுத்துச் செல்வது? கைதுக்கான வாரண்ட் எங்கே?" என்று காவல் அதிகாரிகளிடம் மிகக் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

    கருணாநிதியை காப்பாற்ற முயன்ற முரசொலிமாறனுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே இதயக் கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த முரசொலி மாறன், காவல்துறையினரின் தள்ளுமுள்ளுவில் காயமடைந்தார்.
    தொடர்ந்து முரசொலி மாறனை போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக முரசொலி மாறனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அத்துடன் மாரடைப்பு ஏற்பட்டது.

    Advertisement

    இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த முரசொலி மாறனை உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அப்படி சேர்த்தபோதிலும், ஜெயலலிதா ஆட்சியின் போது, காவல்துறையினர் முரசொலி மாறன் மீதே "அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியில் திமுக இருந்தது. பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, ஒரு மத்திய அமைச்சர் மீது மாநிலக் காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்ததுடன் விளக்கம் அளித்தது.

    Advertisement

    முரசொலி மாறன் அவரது உடல்நலனை சற்றும் பொறுப்படுத்தாமல், தனது தலைவரும் தாய்மாமனுமாகிய கருணாநிதியை காப்பதற்காக நள்ளிரவில் காவல்துறையை எதிர்த்து நின்ற அந்த காட்சி இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. கருணாநிதி காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் (அன்றைய சென்னை மேயர்) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணைடைந்தார். தொடர்ந்து ஸ்டாலின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 8 நாட்களுக்கு பிறகு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கருணாநிதி மொத்தம் ஐந்து நாட்கள் அப்போது சிறையில் இருந்தார். மனிதநேய அடிப்படையில்" நிபந்தனையின்றி விடுவிப்பதாகக் கூறி ஜெயலலிதா தலைமையிலான அரசு கருணாநிதியை விடுவித்தது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    English Summary

    Sabareesan, who stepped forward for Udhayanidhi today, versus Murasoli Maran, who stepped forward for Karunanidhi back then—what actually happened?