சாட்டை துரைமுருகனுக்கு நிம்மதி.. விஜய் குறித்த அவதூறு வழக்கில் முன் ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறாக பேசியதாக கூறி சாட்டை துரைமுருகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் சாட்டை துரைமுருகன் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் தமிழக முதல்வர் விஜய் பற்றியும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

NTK Sattai duraimurugan gets anticipatory bail in defamation case related to TN CM VIjay

சாட்டை துரைமுருகனின் பேச்சுக்கு எதிராக தவெக நிர்வாகி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சாட்டை துரை முருகன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. சாட்டை துரைமுருகன் தனது மனுவில், யாருக்கு எதிராகவும் அவதூறாக பேசவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி என். ரமேஷ், சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன் மூலம் முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய வழக்கில் கைதாவதில் இருந்து சாட்டை துரைமுருகனுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+