தேமுதிக எம்எல்ஏ-க்கள் ஸ்டைல் இது! புஸ்ஸி ஆனந்தை எஸ்பி வேலுமணி சந்தித்தது ஏன்? தராசு ஷ்யாம் ஓபன் டாக்

  • சென்னை: 2011ல் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் எப்படி அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்களோ, அதேபோல் எஸ்பி வேலுமணி தரப்பு இனி தவெக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    அமைச்சர் ஆனந்தை அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் அமைச்சர் ஆனந்தின் அறையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. சுமார் 15 நிமிடங்கள் வரை நடந்த இந்த சந்திப்பின் போது அமைச்சர் செங்கோட்டையனும் உடனிருந்திருக்கிறார்.

    Advertisement

    இதனால் மீண்டும் அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் சாயப் போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை தொடர்ந்து வருகின்றனர். சட்டசபையிலும் கூட எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    இப்படியான சூழலில் திடீரென புஸ்ஸி ஆனந்தை சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் அமித்ஷா சென்னை வரவுள்ள நிலையில், எஸ்பி வேலுமணியின் இந்த நகர்வு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், ஜெயலலிதா காலத்தில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையிலான 5 பேர் பேர் தொகுதி பிரச்சனைக்காக சந்தித்தனர்.

    Advertisement

    இறுதியில் வர்கள் 5 பேரும் ஜெ காங்கிரஸ் அணியாகவே செயல்பட்டனர். சட்டசபையில் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே இருந்தனர். ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே இருந்தனர். தற்போதைய சூழலில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் செல்ல முடியாது. இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    அதனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் எந்த ரிஸ்கையும் எடுக்கவில்லை. வரும் காலங்களில் அதிமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே பேசப் போகிறார்கள். அதற்கான அச்சாரம் தான் இது.. அமைச்சரை பார்ப்பது, தொகுதி கோரிக்கை கொடுப்பது எப்போதும் இருப்பது தான்.. அதன் பின்னணியில் எப்போதும் இப்படியான சம்பவங்கள் தான் இருந்திருக்கின்றன.

    Advertisement

    2011ல் தேமுதிக இப்படியான விஷயங்கள் தான் செய்தன. நாங்கள் தனி அணியாகவே செயல்பட போகிறோம் என்பதை தான் இவர்கள் மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார்கள். அதேபோல் அதிமுகவில் அதிருப்தி இருக்கிறது என்பதையும் வெளிப்படையாக காட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    SP Velumani Faction Will Support TVK Like Dissident DMDK MLAs Supported AIADMK in 2011 says Journalist Tharasu Shyam