செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, ஒபிஎஸ்.. ஆலோசித்த ஸ்டாலின்.. 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக

  • சென்னை: 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அந்தந்த தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கே.என்.நேரு, செந்தில் பாலாஜி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக திமுகவின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்துவிட்டது. இரு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றாலும், திமுக 2வது இடத்தை பிடித்து ஆச்சரியம் கொடுத்தது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் வென்ற அதிமுக, இடைத்தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் களமிறங்க திமுகவினர் உற்சாகமாக இருக்கின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் 5 தொகுதி நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனையில் 5 தொகுதி நிர்வாகிகளுடன் சேர்ந்து செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் பங்கேற்றனர். இதன் மூலமாக செந்தில் பாலாஜி வசம் கரூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளும், கே.என்.நேரு வசம் விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளும், அம்பாசமுத்திரம் தொகுதி ஓபிஎஸ் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    இந்த ஆலோசனையின் போது ஸ்டாலின் நேரடியாகவே 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். அதனால் திமுகவினர் இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும். இடைத்தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். தொகுதியில் மக்கலிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வையுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    ஏற்கனவே பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே திமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட இருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த 5 தொகுதி இடைத்தேர்தலிலும் கூட திமுக இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏதாவது ஒரு தொகுதியில் திமுக வென்றால் கூட, அது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும்.

    English Summary

    Stalin Holds Consultations with Senthil Balaji, KN Nehru and OPS: DMK Gears Up for 5-Constituency Bypolls