சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், சாதாரண ஆன்லைன் சீட்டிங் வேலை கிடையாது.. கேட்டாலே உறைய வைக்கும் ஒரு ஹைடெக் பிளாக்மெயில் நெட்வொர்க் என்றே சொல்லலாம்.. டேட்டிங் ஆப் மூலம் இளைஞர்களை சபல வலையில் வீழ்த்தி, ரூ. 6 கோடிக்கும் மேல் சுருட்டி, அந்த பணத்திலேயே மெத்தை அமைத்து படுத்து உருண்ட ஒரு இளம்பெண்ணின் அதிர்ச்சி பின்னணி இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யார் அந்த பெண்?
சர்வதேச அளவிலான இந்த பிளாக்மெயில் டிராமாவை அரங்கேற்றியவர் ஒரிஜினல் பெயர் பல்லவி சிங் ராஜ்புத்.. ஆனால் சோஷியல் மீடியாவில் தன்னுடைய பெயரை மறைத்து, ஸ்வீட்டி திவாரி என்ற பெயரில் போலி அக்கவுண்ட்களில் இயங்கி வந்துள்ளார்..
குறிப்பாக, டின்டர் (Tinder) போன்ற ஆன்லைன் டேட்டிங் ஆப்-களில் அதிக நேரம் மூழ்கியிருப்பார்.. வசதியான ஆண்களையும், சபல புத்தி கொண்ட நபர்களையும் மட்டுமே குறிவைத்து மெசேஜ் அனுப்ப தொடங்குவார். ஆரம்பத்தில் சாதாரண நட்பாகத்தான் பேசுவார்.. நாளடைவில் மயக்கும் வார்த்தைகளாலும் ஆபாசப் பேச்சுக்களாலும் ஆண்களை தன் வசப்படுத்துவார். பல்லவி சிங்கின் இந்த மாய வலையில் சிக்கி, அவரோடு தனியறைகளில் தங்குவதற்கு பல ஆண்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தனியறையில் தங்கும் தருணங்களில், பல்லவி சிங் அந்த நபர்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடன் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் நெருக்கமான ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்து கொள்வார். பிறகு சம்பந்தப்பட்ட நபர்களிடம், "என்னிடம் உனது ஆபாச வீடியோக்கள் நிறைய உள்ளன. நான் கேட்கும் பணத்தைத் தராவிட்டால், அனைத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உனது மானத்தைச் சந்தி சிரிக்க வைத்துவிடுவேன்" என்று மிரட்டுவாராம். இதைக்கேட்டு பதறிப்போன தொழிலதிபர்களும் பெரிய மனிதர்களும், தங்களது குடும்ப மானம், சமுதாய கவுரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில், அவர் கேட்ட கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டுவந்து கொட்டியுள்ளனர். ஒருவேளை யாராவது பணம் தர மறுத்து அடம்பிடித்தால், உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர்கள் மீது கற்பழிப்பு, கொலை முயற்சி போன்ற ஜாமீனில் வர முடியாத கடுமையான பிரிவுகளின் கீழ் பொய் புகார்களை தந்துவிடுவாராம். இப்படி அவர் கொடுத்த பொய்ப் புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.. புதிய நபர்களை மிரட்டும் போதெல்லாம், "ஒழுங்காக நான் சொல்வதைக் கேள், இல்லாவிட்டால் ஏற்கெனவே 5 பேரை ஜெயிலில் தள்ளியது போல உன்னையும் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று அந்த பழைய வழக்குகளையே மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்துவாராம். இப்படியே பலரையும் அச்சுறுத்திப் பறிக்கப்பட்ட மொத்தப் பணம் மட்டும் சுமார் ரூ. 6 கோடியைத் தாண்டுகிறது. இந்த தொகையை வைத்து பல்லவி சிங் செய்த காரியம்தான் போலீஸையே மலைக்க வைத்துள்ளது.. பறித்த பணக்கட்டுகளைத் தனது வீட்டின் ஒரு அறையில் மெத்தை போல அடுக்கி வைத்து, அந்த பண மெத்தையின் மீது படுத்து உருள்வாராம் பல்லவி.. அப்படி படுத்து உருள்வதையும் வீடியோ எடுத்து பார்த்து மகிழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு கேங்ஸ்டர் பாணியில் கெத்தாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த பண மெத்தை வீடியோவும், துப்பாக்கி போட்டோவும் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட ஆண்கள், யாருமே பல்லவி மீது புகார் தரவில்லை.. கடைசியில் ஹைகோர்ட் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பிரயாக்ராஜ் காவல் துறையினர் களத்தில் இறங்கி தீவிர விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், பல்லவி சிங் தனியாக இந்தச் சாம்ராஜ்யத்தை நடத்தவில்லை என்பதும்; அவருக்கு உதவியாக 2 தோழிகள் மற்றும் 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் கொண்ட கும்பல் பின்னணியில் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இப்போது பல்லவி சிங் ராஜ்புத் உட்பட அந்த 5 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் மக்களுக்குக் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். "முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் ஆன்லைன் மூலமாகவோ, டேட்டிங் செயலிகள் மூலமாகவோ தேவையில்லாமல் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். தெரியாத நபர்களிடம் பழகினால் இதுபோன்ற பேராபத்தில் சிக்கி வாழ்க்கையையே இழக்க நேரிடும்" என எச்சரித்துள்ளனர். ஆனால் பண மெத்தையில் புரளும் இந்த ஸ்வீட்டியின் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி எல்லாம் ஏமாற்றி வாழணுமா? என்று கொந்தளித்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும் சிலரோ, வாழ்ந்தா இப்படி வாழணும் என்று பதிவிட்டு வருகின்றனர்...!!ஸ்வீட்டியின் மாஸ்டர் பிளான்
பல்லவி குறி வைத்த பிசினஸ்மேன்
பண மெத்தையில் படுத்து உருண்ட ஸ்வீட்டி
மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல்
வாழ்ந்தா இப்படி வாழணும்