டாஸ்மாக் கடைகளில் சட்டென நடந்த மாற்றம்.. குடிமகன்கள் நினைத்தே பார்க்காதது

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் விரும்பி கேட்கும் மதுபான வகைகள கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டு உள்ளது. குறிப்பாக 280 ரூபாய் மதிப்புள்ள நடுத்தர வகை மதுபானங்கள் எந்த மதுக்கடைகளிலும் விற்கப்படுவது இல்லை என்றும், ஆனால் அதைவிட சற்றே குறைவான விலையில், உயர்தர மற்ற மது வகை விற்கப்படுவதாகவும், வேறு வழி இல்லாமல் இதை வாங்குவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட இன்னும் கூடுதலாக ரூ.20 வாங்குகிறார்கள் என்று மதுப்பிரியர்கள் புகார்கள் கூறி வருகிறார்கள். என்னதான் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் மதுவிற்கு பாட்டிருக்க கூடுதல் தொகை வாங்க மாட்டோம் என்று கூறினாலும் தொடர்ந்து வாங்கப்படுவதால் குடிமகன்கள் சண்டை போடுவது அதிகமாக வருகிறது. அதை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பெரிய பலன் கொடுக்கவில்லை என்று குடிமகன்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதுமே பல டாஸ்மாக் கடைகளில், வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் பிரபல மதுபான வகைகள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பல நிறுவனங்களின் ஒரு சில பிராண்டுகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் கேட்கும் பல பிராண்டுகள் பெரும்பாலான கடைகளில் இல்லை என்றும் மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், பலரும் விருப்பமான மதுபானங்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக மதுப்பிரியர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    டாஸ்மாக் குடிமகன்கள் விரும்பாத பிராண்டுகளை விற்பதாகவும் , இந்த பிரண்டு தான் உள்ளது நீங்கள் விரும்பும் பிராண்டு இல்லை என்று கூறுவதாகும் வேதனை தெரிவிக்கிறார்கள் குடிமகன்கள்.

    இதனால், விரும்பாத பிராண்டுகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மதுப்பிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சில டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் இருந்து மதுபானங்கள் சரிவர வருவதில்லை. எங்களுக்கு அனுப்பி வைக்கும் சரக்குகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் கேட்கும் பிராண்டுகள் இல்லை, அவர்களிடம் தினமும் விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. விநியோகத்தில் என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது எங்களுக்கும் தெரியவில்லை. அதற்கு டாஸ்மாக் நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்றனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் மதுபானங்கள் சமமாக கொள்முதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

    Advertisement

    அதிகாரிகள் சொல்வது ஒரு புறம் எனில் குடிமகன்கள் சொல்வது வேறு மாதிரி இருக்கிறது.‌ பிடித்த தரமான மதுபானங்கள் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இல்லை என்றே கூறப்படுகிறது.

    English Summary

    Allegations have surfaced across Tamil Nadu regarding the unavailability of preferred liquor brands in TASMAC outlets. Consumers claim that popular mid-segment brands priced around ₹280 are out of stock, forcing them to settle for inferior, slightly cheaper alternatives."