ரூ.10 எக்ஸ்ட்ராவால் ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி.. டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்! மது பிரியர்கள் ஷாக்!

  • சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருவதைக் கண்டித்து பல இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை மூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறி வந்தார்.

    Advertisement

    டாஸ்மாக்

    இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு துறையின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் துறை சார்ந்த மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அதில், டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம், டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அமைச்சர் வார்னிங்

    டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், இனிமேல் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, கூடுதல் பணம் வாங்கினால் முதல் மூன்று மாதங்களில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அடுத்த முறையும் அதே தவறு நடந்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

    Advertisement

    இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள பல டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பான புகார்களை மதுபிரியர்கள் வீடியோக்கள் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    முதல் நாளிலேயே 67 பேர் சஸ்பெண்ட்

    இந்த நிலையில், மதுபானத்துக்கு கூடுதலாக பணம் வசூலித்த தமிழ்நாடு முழுவதும் 67 ஊழியர்கள் நேற்று முன்தினம் (செப்டம்பர் 2) ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் எண் மூலம் பல புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் ஒரே நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 மதுக்கடை ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    Advertisement

    மேலும் 157 ஊழியர்கள் சஸ்பெண்ட்

    டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 224 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது. அரசின் இந்த நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கூடுதல் விலைக்கு மது விற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், அரசைக் கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    Advertisement

    கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்

    பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த புகாரில் நேற்று முன்தினம் 67 பேரும், நேற்று (வியாழக்கிழமை) 157 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சஸ்பெண்ட் அறிவிப்பை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளதால் மதுப்பிரியர்கள் நேற்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    மத் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை ஏற்க வலியுறுத்தியுள்ள டாஸ்மாக் ஊழியர்கள், காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிட வேண்டியிருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

    English Summary

    Liquor drinkers were shocked when TASMAC employees across various locations staged a surprise protest and shut down shops to condemn the suspension of staff members who had collected an extra ₹10 per liquor bottle.