காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சி திட்டம் ரத்து.. தவெக அரசால் அதிர்ச்சியில் மக்கள்

  • சென்னை தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகிவிட்டது. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை தொடர்வோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். மறுபக்கம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கியமான வளர்ச்சி திட்டங்களை தவெக அரத்து செய்து வருகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சி திட்டம் மற்றும் பாரம்பர்ய மறுமலர்ச்சி திட்டத்தையும் தவெக அரசு அரத்து செய்துள்ளது.

    Advertisement

    தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்களின் கருத்துகள் அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். திமுக கொண்டு வந்த திட்டங்களை தவெக முடக்குவதாக அக்கட்சி எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள். பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த வாரம் விஜய் அறிவித்தார்.

    Advertisement

    காஞ்சிபுரம் வளர்ச்சி திட்டம் ரத்து

    பரந்தூரில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு அதிகளவு நிலம் இருப்பதாகவும், அதற்காகவே விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விமான நிலையத்தை செயல்படுத்த முனைப்பு காட்டியதாக தவெக கூறியது. மறுபக்கம் தவெக வளர்ச்சி திட்டங்களை முடக்கி வருகிறது என்று திமுகவினரும், தொழில்துறையினரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து விவகாரமே அரசியலில் இன்னும் ஓயாமல் பிரச்சனையாகி கொண்டிருக்கிறது.

    மற்றொரு வளர்ச்சி திட்டத்தையும் தவெக அரசு ரத்து செய்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சி திட்டம் மற்றும் பாரம்பர்ய மறுமலர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. 2025 முதல் 2045 வரை காஞ்சிரபுரத்தில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்திருந்தனர்.

    Advertisement

    மற்ற திட்டங்களின் நிலை

    காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சி திட்டம் மற்றும் பாரம்பர்ய மறுமலர்ச்சி திட்டத்தை ரத்து செய்வதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கிர்லோஷ்குமார் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இது காஞ்சிபுரம் மற்றும் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமழிசை, மீஞ்சுர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூருக்கு அறிவிக்கப்பட்ட புது நகர் வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    After Parandur airport TVK Government cancelled Kancheepuram new Town development plan and heritage revitalization plan made shock to people.