சின்ன மீன் எல்லாம் இருக்கட்டும்! திமுகவின் பெரிய திமிங்கலத்திற்கு குறி வைக்கும் விஜய்! ஆக்சன் பிளான்

  • சென்னை:விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த திமுக ஆட்சிக்கால புகார்கள் மற்றும் முறைகேடுகள் மீதான சட்ட நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    Advertisement

    கடந்த 60 நாட்களில் அடுத்தடுத்து வழக்குகள் மற்றும் நீதிமன்ற சட்டப் போராட்டங்களால் திமுக கூடாரம் பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், திமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான பி. மூர்த்தி விஜய் அரசின் அடுத்த இலக்காக மாறியுள்ளார்.

    Advertisement

    ரேடாரில் சிக்கிய பி. மூர்த்தி

    கடந்த திமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் கட்டுக்கடங்காத முறைகேடுகள் நடந்ததாக சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    தமிழகத்தில் உள்ள 589 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அமைச்சரின் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு சொத்து பதிவிற்கும் 20 சதவீத கமிஷன் பெறப்பட்டதாக நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இரவு 9 மணி வரை சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவுகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தவெக தரப்பு தெரிவிக்கிறது.

    தற்போது, பி. மூர்த்தி அமைச்சராக இருந்த காலகட்டத்தின் முக்கியக் கோப்புகளைத் விஜய் அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அவர் மீது முறையான வழக்குப்பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியைக் கோர ஆளுநருக்கு விரிவான அறிக்கை அனுப்பும் பணிகளைத் அரசின் சட்டப் பிரிவு அதிவேகமாக மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பி. மூர்த்தி, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிடுமாறு சவால் விடுத்துள்ளார். எனினும், விஜய்யின் அடுத்த பிடி மூர்த்தியை நோக்கியே பாயப்போகிறது என்பதைத் தலைமைச் செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    கடந்த 60 நாட்களின் அதிரடிப் பட்டியல்

    முன்னாள் அமைச்சர் பி. மூர்த்திக்கு வலை விரிக்கப்படுவதற்கு முன்பாக, கடந்த சில வாரங்களில் விஜய் அரசு திமுகவின் முக்கியத் தலைவர்கள் பல ஆக்சன்களை எடுத்துள்ளது.

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெகவினர் புகார் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

    Advertisement

    எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் கைது

    விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், முதல்வர் பற்றி தவறாக பேசியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும்நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

    செந்தில் பாலாஜி மீதான பி.எம்.எல்.ஏ நடவடிக்கை

    சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடரப்பட்ட வழக்குகளில், முன்னாள் அமைச்சர்களான க. பொன்முடி மற்றும் வி. செந்தில் பாலாஜி ஆகியோரைத் தாமதமின்றித் தீவிரமாக விசாரணை நடத்தவும், நீதிமன்ற விசாரணையை வேகப்படுத்தவும் விஜய் அரசு ஆளுநரிடம் சிறப்பு அனுமதியைக் கோரியுள்ளது.

    வேலு & கே.என். நேரு மீதான ஆளுநர் கோப்பு

    மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எவ வேலு, கே.என். நேரு ஆகியோருக்கு எதிராக முறையான விசாரணை நடத்த விஜய் அரசு ஆளுநரிடம் கோப்புகளைச் சமர்ப்பித்துள்ளது.

    Advertisement

    இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் அரசு ஆட்சி நிர்வாகத்தில் உள்ள சவால்களை மறைக்க, காவல் துறையை ஏவி சினிமா பாணி பழிவாங்கும் அரசியலை நடத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    English Summary

    TVK Government next focus is the Former DMK Minister P. Moorthy: Big target