விஜய் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சர் யார் தெரியுமா? அன்பில் துறையை கையில் எடுத்த நபர் இவர்தான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் 120 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விஜய் முதல்வராகப் பதவியேற்கிறார்.

இந்த தருணத்தில், விஜய்யுடன் சேர்த்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தேசப் பட்டியலில் கல்வித்துறை பேசுபொருளாகியுள்ளது.

TVK Vijay Cabinet Who is P Venkataramanan Education Portfolio for Mylapore MLA

முக்கிய அமைச்சர்கள் மற்றும் துறைகள்

வெளியாகியுள்ள உத்தேசப் பட்டியலின்படி, முதல்வர் விஜய் வசம் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இருக்கும். மற்ற முக்கியப் பொறுப்புகளில் அனுபவமும் இளமையும் கலந்த கலவை காணப்படுகிறது:

செங்கோட்டையன்- பொதுப் பணித் துறை

புஸ்ஸி ஆனந்த்- நகராட்சி நிர்வாகத் துறை

நிர்மல்குமார்- மின்சாரத் துறை

ஆதவ் அர்ஜுனா- விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

நிர்மல்குமார்- மின்சாரம்

ஆதிதிராவிட நலத் துறை- ராஜ்மோகன்

முஸ்தபா- சிறுபான்மை நலத் துறை

பள்ளி கல்வித் துறை- வெங்கட்ரமணன்

அருண்ராஜ்- பத்திரப்பதிவு மற்றும் வணிகத் துறை

கல்வித்துறை அமைச்சராக வெங்கட்ரமணன்: யார் இவர்?

இந்த அமைச்சரவைப் பட்டியலில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் பெயர் வெங்கட்ரமணன். இவருக்கு மிக முக்கியமான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பின்னணி மற்றும் தகுதி:

பிராமண சமூகத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணன், நீண்ட காலமாக விஜய்யின் அரசியல் நகர்வுகளில் அவருக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவர் என அறியப்படுகிறார். பி. வெங்கடராமணன் (பிறப்பு 1978) தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளராகவும், தமிழ்நாடு சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இந்த முறை சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர் ஆவார். மேலும், இவர் 2000-ம் ஆண்டு முதல் விஜய்யின் மேலாளராகவும் இருந்து வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சென்னையைச் சேர்ந்த இவர், பத்மநாபன் என்பவரின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் (M.Com) பட்டமும், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் (LLB), பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) பட்டமும் பெற்றுள்ளார். இவரது மனைவி சாய் விஜய் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

2024-ம் ஆண்டு நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளராக வெங்கடராமணன் பொறுப்பு வகித்து வருகிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இத்தேர்தலில் 70,070 வாக்குகளைப் பெற்ற அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய உறுப்பினர் த. வேலுவை 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அன்பில் மகேஷ் கையில் இருந்த துறை இவருக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதியகல்விக்கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முயன்று வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு பிராமணர் நியமனம் செய்யப்பட்டு உள்ளது கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+