இதுதான் உங்களது “நாகரிக அரசியலா” முதல்வர் விஜய் அவர்களே! வானதி சீனிவாசன் ட்வீட் பதிவு
கோவை: "இதுதான் உங்களது "நாகரிக அரசியலா" முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்? என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பியா சென்ற போது, நெதர்லாந்து நாட்டின் டென் ஹாக் நகரில் அந்த நாட்டுப் பிரதமர் ராப் ஜெட்டன் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே நேற்று மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்த அந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து கொடுத்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, "இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் முதல்வர் விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை.. இதனால் பாஜக கண்டம் தெரிவித்துள்ளது.
பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "இதுதான் உங்களது "நாகரிக அரசியலா" முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்?
ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை பதிலாக மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள்.
இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் உங்களுக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா?
"மாற்றம்" என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள் கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை. தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்கு பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது. செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டாடிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை: "இதுதான் உங்களது "நாகரிக அரசியலா" முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்? என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பியா சென்ற போது, நெதர்லாந்து நாட்டின் டென் ஹாக் நகரில் அந்த நாட்டுப் பிரதமர் ராப் ஜெட்டன் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே நேற்று மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்த. அந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து கொடுத்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, "இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் முதல்வர் விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை.. இதனால் பாஜக கண்டம் தெரிவித்துள்ளது.
பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "இதுதான் உங்களது "நாகரிக அரசியலா" முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்?
ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை பதிலாக மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள்.
இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் உங்களுக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா?
"மாற்றம்" என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள் கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை. தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்கு பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது. செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டாடிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
-
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா

Click it and Unblock the Notifications