பில்டப் கொடுத்தும் போலி தகவலுடன் விஜய்க்கு ஆதரவாக பரவும் வீடியோக்கள்! வடக்கில் நடப்பது என்ன?

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் செயல்பாடுகளை பாராட்டி சமீப காலமாக வட இந்தியாவில் உள்ள சோஷியல் மீடியா பிரபலங்கள் வீடியோ பதிவிட்டு வருவது அதிகரித்துள்ளது. முதல்வர் விஜய், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும், தமிழ்நாட்டில் பல சலுகைகளையும் அறிவித்து இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன.

    Advertisement

    இதில் விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் நடைபெறாத சம்பவங்கள் மற்றும் சில சம்பவங்களை மிகைப்படுத்தி அந்த வீடியோக்களில் கூறி டிரெண்ட் ஆக்கி வருவதையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் பொதுவெளியில் மாடுகளை வெட்டக்கூடாது என வலியுறுத்தி முதல்வர் விஜய் உயர் நீதிமன்றத்தை நாடியிருப்பதாக கூறி வீடியோ பரவி வருகிறது.

    Advertisement

    விஜய் அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக

    உண்மையில், தமிழகத்தில் மாடுகளை வெட்ட தடை விதித்து உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது என்பதே உண்மையான தகவல் ஆகும். ஆனால் உண்மைக்கு மாறாக பரப்பப்படும் இந்த செய்திகளை வட இந்திய இன்புளுயன்ஸர்கள் பலரும் தங்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்களும், ஆயிரக்கணக்கான கமெண்டுகளும் பதிவாகி வருகின்றன.

    ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட் உடன் பல இன்புளுயன்சர்கள் விஜய் குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். எடுத்துக்கட்டாக, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, இந்துவோ, முஸ்லீமோ, பீகாரோ, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவரோ அல்லது தமிழ்நாட்டுக்காரரோ என யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள். தூக்கிலிடப்படுவார்கள் எல்லது என்கவுண்டர் செய்யப்படுவார்கள் என்று விஜய் உத்தரவிட்டு இருப்பதாக கூறி பல வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    Advertisement

    லைக்ஸ்களை அள்ளும் வீடியோக்கள்

    இந்த வீடியோவையும் லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். லைக்குகளும் கமெண்டுகளில் ஃபயரும் வட இந்திய இளைஞர்கள் பதிவிட்டு வருகிறார்கள். பொய்யான தகவல்கள், ஏகத்துக்கும் பில்டப் என இவை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை எதேச்சையாக நடக்கிறதா? என்ற கேள்விகளும் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

    ஊழலற்ற, மதச்சார்பற்ற, இளைஞர்களை ஈர்க்கும் ஒரு மாற்றுத் தலைவராக விஜய்யை தேசிய அளவில் முன்னிறுத்தும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்துள்ளதா? இதற்கு பின்னணியில் விஜய்யின் சமூக வலைத்தள டீம் உள்ளதா? அல்லது எதேச்சையாக வியூஸ்க்காக இப்படி நடக்கிறதா? வலைத்தளங்களில் பெரும் விவாதமே ஆரம்பித்துள்ளது.

    Advertisement

    உன்னிப்பாக கவனிக்கும் காங்கிரஸ்

    ஒரு பக்கம் தவெக எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் விஜய் அடுத்த பிரதமர் என்ற ரேஞ்சுக்கு பில்டப் செய்ய தொடங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த பிம்ப கட்டமைப்பு வீடியோக்களுக்கு பின்னணியில் அரசியல் கணக்கு இருக்கலாம் என்ற பேச்சும் வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் பிம்பம் தேசிய அளவில் ராகுலை ஓவர்டேக் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி தலைமையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay Prime Ministerial candidate: Recently, there has been an increase in social media influencers from North India posting videos praising the actions of Tamil Nadu Chief Minister Vijay. Videos circulating on social media highlight the bold measures taken and the various welfare schemes announced by Chief Minister Vijay since assuming office in Tamil Nadu.