சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து லண்டன் சென்ற முதல்வர் விஜய்யை ஏராளமானோர் திரண்டு வந்து வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நடிகரும் கார் ரேஸ் வருமான அஜித்குமார் பங்கேற்கும் கார்பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். தொடர்ந்து தொழில்துறை சார்பில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க திமுக ஆட்சிக் காலத்திலேயே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் அந்த நிறுவனங்களை சந்தித்து விரைவில் வேலைகளை துவக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 2036இல் 1.5 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு என்ற இலக்கை நிர்ணயத்து அதனை நோக்கி மிழக அரசு பயணித்து வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட்டு, சுமார் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு சொல்லி உள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்துடன் முடிந்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 10-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். வியாழக்கிழமை மதியம் வரை முதல்வரின் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் சுமார் 9 மணியளவில் சென்னையிலிருந்து முதல்வர் விஜய் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அவர் பயணத்திற்கு சற்று நேரம் முன்பு தான் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. பிரிட்டன் செல்லும் முதல்வர் அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார் எனவும், ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது நடிகர் அஜித்குமார் பிரிட்டனில் நடக்கும் "லீமேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன்" கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். அவரது ஏகே ரேசிங் அணி இந்த பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கே இருக்கிறது. இதற்கிடையே சனிக்கிழமை அன்று பிரிட்டன் செல்லும் முதல்வர் விஜய் கார்பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைப்பார் என அறிவித்துள்ளது சென்னையில் உலக தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கும் நிலையில் தற்போது சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் பார்வையிட்டு அந்த போட்டியை தொடங்கி வைப்பார் என சொல்லப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவரது ரசிகர்கள் அஜித் ரசிகர்களிடையே மோதல் வெடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நிகழ்வுகளில் விஜய் அஜித் ஒன்றாக பங்கேற்றதோடு, கரூர் சம்பவத்தின் போது விஜய்க்கு ஆதரவாக அஜித்குமார் பேசியதும் இருதரப்பு ரசிகர்களை சமாதானம் செய்ய வைத்தது. தற்போது அஜித் கலந்து கொள்ளும் போட்டியை விஜய் தொடங்கி வைக்கிறார் என்ற தகவல் இரு தரப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.முதல்வர் விஜய்
இங்கிலாந்து பயணம்
தமிழக அரசு
லீமேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன்
விஜய் - அஜித்