மனைவி ஆடி மாதம் ஊருக்கு போன கேப்.. பக்கத்து வீட்டு நமீதாவுக்கு போன மெசேஜ்.. சம்பவமே அதுக்கப்பறம்தான்

  • சென்னை: சென்னை சூளைமேட்டில், ஆடி மாதம் என்பதால், அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார் இளம் மனைவி.. அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு பெண்ணிடம் சென்று ஏடாகூடமாக கணவர் பேசியிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகுதான் ட்விஸ்ட்டே.. ஒட்டுமொத்த சென்னையும் இந்த சம்பவத்தால் ஆடிப்போய் கிடக்கிறது.. இது தொடர்பாக 5 பேர் ஜெயிலுக்குள் உள்ளார்கள். போலீஸ் விசாரணையும் நடக்கிறது.

    Advertisement

    சென்னை சூளைமேடு பத்மநாப நகர், தயாளு அம்மாள் தெருவை சேர்ந்தவர் சுதர்சன்.. 30 வயதாகிறது.. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கடந்த 3 வருடங்களாக மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார்.

    Advertisement

    சென்னை சூளைமேடு

    அப்பா மறைந்துவிட்ட நிலையில், தன்னுடைய அம்மா சரஸ்வதி மற்றும் அண்ணனுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கும் கடந்த செப்டம்பர் மாதம் பெற்றோரால் பார்த்து முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, தற்போது ஆடி மாதம் என்பதால், மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார் சுதர்சன்... மனைவியைப் பிரிந்து தனியாக இருந்த நேரத்தில்தான், திடீரென புத்தி தடுமாறியது.

    நமீதாவிடம் காதலை சொல்லி

    கடந்த ஜூலை 24-ம் தேதி நள்ளிரவில், தனது வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நமீதா (21) என்ற பெண்ணிடம் சென்று சுதர்சன் பேச தொடங்கியுள்ளார். அப்போது, "உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. நாம் திருமணம் செய்து கொள்ளலாம், உன்னை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

    Advertisement

    இதைக்கேட்டு அதிர்ச்சியில் பதறிப்போனார் நமீதா.. ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சுதர்சன் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் தன்னுடைய செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து கொண்டார்.

    ரிக்கார்ட்டட் ஆடியோ

    ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை அன்று, நமீதா தன்னுடைய ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு, சுதர்சனிடம் சென்றுள்ளார்.. ரிக்கார்ட் செய்த ஆடியோவை போட்டுக்காட்டி, "மன்னிப்பு கேட்க வேண்டும்" என மிரட்டலாகக் கேட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன சுதர்சன், "இனிமேல் இதுபோன்று எந்தத் தவறும் நடக்க மாட்டேன்" என்று கூறி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு தப்பித்துள்ளார்.

    ஆனால், பிரச்சனை இதோடு முடியவில்லை! மறுநாளே சுதர்சனின் வாட்ஸ்ஆப் நம்பருக்கு நமீதாவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அல்ட்ரா அமர் அவென்யூ பகுதிக்கு உடனடியாக வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை நம்பி ஆசையோடு சென்ற சுதர்சனுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

    Advertisement

    நமீதாவுக்கு நஷ்ட ஈடு

    அங்கு சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மோனிஷா உட்பட 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் குழுவாகத் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் சுதர்சனை உடனடியாக வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று மிரட்டத் தொடங்கினர். "நமீதாவிற்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும்.. தர மறுத்தால் போலீஸ் ஸ்டேஷ்னில் புகார் அளித்து உன்னை ஜெயிலில் அடைத்து விடுவோம்" என மிரட்டியுள்ளனர்.

    தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என சுதர்சன் சொன்னதால், யோசித்து முடிவு செய்ய 2 நாட்கள் அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தனர். அவகாசம் முடிந்ததும் மீண்டும் சுதர்சனை அழைத்து பணம் கேட்டு வற்புறுத்தினர்கள்..

    Advertisement

    காயங்கள் மன உளைச்சலில் சுதர்சன்

    சுதர்சன் மீண்டும் பணம் இல்லை என்று சொன்னதும், அந்த கும்பல் தங்களது சுதர்சனை பிளாஸ்டிக் பைப்பாலும் கையாலும் சரமாரியாகத் தாக்கியதோடு, அவரது இடது காலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இறுதியாக, "ரூ.2 லட்சமாவது கொடுக்க வேண்டும்" என மிரட்டி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    காயங்களோடும் மன உளைச்சலோடும் வீட்டிற்கு வந்த சுதர்சன், இனி மறைக்க முடியாது என்பதை உணர்ந்து, நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது மனைவியிடம் கூறினார். கணவன் செய்தது தவறு என்றாலும், அவர் சந்தித்த சித்ரவதைகளையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்ட மனைவி, உடனே போலீசுக்கு விஷயத்தை சொன்னார். பிறகு சுதர்சனும் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    Advertisement

    உடம்பெல்லாம் சிகரெட் சூடு

    புகாரைப் பெற்றுக் கொண்ட சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மணி நகுலன் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சுதர்சனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்ததும், சிகரெட்டால் சூடு வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் உண்மை என உறுதியானது. உடம்பெல்லாம் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர், இந்த மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மோனிஷா (26), கேரளாவைச் சேர்ந்த சிவரஞ்சனி (21), பக்கத்து வீட்டு பெண் நமீதா (21), சூளைமேடு தமிழர் வீதியைச் சேர்ந்த போட்டோகிராபர் பாலகிருஷ்ணன் (30) மற்றும் அவ்வை நகரைச் சேர்ந்த ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர் கணேஷ் (26) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அனைவருமே நமீதாவின் நண்பர்களாம்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் இப்போது ஜெயிலில் உள்ளனர்.. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞரே இந்த கட்டப்பஞ்சாயத்து மற்றும் சித்ரவதை கும்பலுக்குத் தலைமை தாங்கிய சம்பவம் சென்னை முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Wife Went Home for Aadi... Husband Messaged the Girl Next Door!! What Happened Next in chennai?