எஸ்ஐஆர்-க்கு எதிரான போராட்டம்.. களத்திற்கு வரும் நிர்மலா சீதாராமனின் கணவர்.. அதிரப்போகும் டெல்லி!

  • டெல்லி: எஸ்ஐஆர்க்கு எதிராக நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பங்கேற்க உள்ளார். இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோருடன் பரகலா பிரபாகரும் பங்கேற்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    நாடு முழுவதும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஒருபுறமும், சிஜேபி மற்றும் மாணவர்கள் அமைப்புகள் மறுபுரமும் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை கட்டுப்படுத்த பாஜக கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி டெல்லியில் எஸ்ஐஆர்-க்கு எதிராக போராட்டம் நடக்க உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், தலித்துகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கி எஸ்ஐஆர்க்கு எதிரான மக்கள் என்ற கூட்டணியால் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஜனநாயகத்தை மீட்டெடுப்பது மற்றும் நாடு முழுவதும் ஜந்தர் மந்தர்களை உருவாக்குவது என்ற குறிக்கோளுடன் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கையிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு தெருவிலும் ஜந்தர் மந்தர் என்பதே இதன் முழக்கமாகும். இந்தப் போராட்டத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, பிரகாஷ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் விவசாய அமைப்புத் தலைவர் ராகேஷ் திகைத், மகாத்மா காந்த் பேரன் துஷார் காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர். அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளார். இவர் பாஜகவுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

    தற்போது நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் களத்திலும் இறங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக பரகலா பிரபாகர், குடிமக்களின் ரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலை என்று விமர்சித்திருந்தார். இதனால் இந்த போராட்டத்தின் மீது அதிக கவனம் திரும்பி இருக்கிறது.

    English Summary

    FM Nirmala Sitharaman Husband Parakala Prabhakar to Participate in Anti-SIR Agitation at Delhi