பெயர், மொபைல் நம்பர் லீக்.. உங்கள் பெயரில் போலி கடன் வாங்க முடியுமா? SBI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

  • டெல்லி: ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்கள் கையில் கிடைத்தால், உங்கள் பெயரிலேயே கடன் வாங்க முடியுமா? வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடுவது மட்டுமல்லாமல், உங்கள் அடையாளத்தை பயன்படுத்தி மோசடியாகக் கடன் பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!

    Advertisement

    சுமார் 3.75 லட்சம் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹேக்கர்கள் மூலம் இந்த டேட்டா லீக் ஆகியிருக்கிறதாம். அதில் 3,897 தனிநபர்களை அடையாளம் காண உதவும் தகவல்கள் இருப்பதாக வங்கியின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    Advertisement

    ஸ்டேட் பேங்க்

    இதையடுத்து சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்கி, விசாரணைக்காக தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தையும் ஸ்டேட் பேங்க் நியமித்துள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்தால் வங்கியின் முக்கிய செயல்பாடுகள், நிதிநிலை குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஸ்டேட் பேங்க் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இந்த லீக் ஆன டேட்டாவை வைத்து ஒருவரால் உங்கள் பெயரில் கடன் வாங்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இருப்பினும், தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிட்டன என்பதற்காக மட்டும் ஒருவர் உங்கள் பெயரில் கடன் வாங்கிவிட முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், முகவரி மற்றும் ஏற்கெனவே உள்ள கடன் விவரங்கள் போன்ற தகவல்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் உங்கள் அடையாளத்தை போலியாக உருவாக்க முயற்சிக்கலாம்.

    Advertisement

    போலி கடன்

    வங்கி அதிகாரிகள் போல தொலைபேசியில் பேசி தகவல்களை பெறுவது, போலியான கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட மோசடிகளில் அவர்கள் ஈடுபடலாம். ஆனால், இதையெல்லாம் வைத்து ஒருவர் பெயரில் கடன் பெற முடியுமா என்பது அவர்களிடம் என்ன மாதிரியான தகவல்கள் உள்ளது என்பதை பொறுத்தே இருக்கும். அதாவது உங்கள் பெயரில் கடன் வாங்கவே முடியாது என சொல்லிவிட முடியாது. போலி தகவல்களை வைத்து போலியாக ஒருவர் பெயரை உருவாக்கி, கடன் வாங்க முயல்வார்கள். கடன் கிடைப்பது கடினம் என்றாலும் அதை முழுமையாக நாம் நிராகரித்துவிட முடியாது.

    Advertisement

    என்ன செய்ய வேண்டும்?

    உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்த்து, உங்களுக்கு தெரியாத கடன் அல்லது Credit Enquiries இருக்கிறதா என்பதை பாருங்கள். இப்போது பல செயலிகளில் இந்த சிபில் ஸ்கோரை நீங்கள் இலவசமாகவே பார்க்க முடியும். சந்தேகத்துக்குரிய பதிவு இருந்தால் சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்தையும் கிரெடிட் தகவல் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

    பகிர வேண்டாம்

    வங்கி பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன், KYC விவரங்களை உடனடியாக சரிபார்க்க வேண்டும் என்று கூறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். OTP, PIN, பாஸ்வோர்ட்டை யாரிடமும் பகிர வேண்டாம். தெரியாத நபர்களின் அறிவுறுத்தலின்படி ரிமோட் அக்சஸ் செயலிகளையும் நிறுவ வேண்டாம்.

    Advertisement

    அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்தால் உடனடியாக வங்கியை தொடர்புகொள்ள வேண்டும். சைபர் நிதி மோசடிகளை 1930 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

    English Summary

    Reports of a possible SBI customer data leak have raised concerns about identity theft and fraudulent loan applications(ஸ்டேட் பேங்க் ஹேக்கிங் முயற்சி): SBI Data Leak latest news in tamil.