17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு!

  • பாட்னா: இந்தியாவை பொறுத்தவரை ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் இந்தியாவில் சிறார் திருமணங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. வழக்கமாக இந்த விவகாரத்தில் சிறுமிகள்தான் பாதிக்கப்படுவார்கள். ஆனால், பீகாரில் நடந்த சிறார் திருமணத்தில் 17 வயது சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

    Advertisement

    பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்த பூஜா குமாரி எனும் இளம்பெண், தனது வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகி வந்திருக்கிறார்.

    Advertisement

    இருவருக்கும் இடையே நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. நம்மூரில் இப்படி நடப்பது ஒன்றும் ரொம்பவும் புதுசு இல்லை. பல சினிமா பிரபலங்கள் தங்களை விட வயதில் சிறியவர்களை கணவராக திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஆனால், 17 வயதில் திருமணம் என்பது போக்சோ வழக்காகும். இதெல்லாம் தெரியாத பூஜா, சிறுவனுடன் அடிக்கடி தனிமையில் காதல் மொழி பேசி வந்திருக்கிறார்.

    ஊருக்குள் இப்படி ஒரு விஷயம் நடக்கிறது எனில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. இப்படியாக இவர்களின் காதல் கதை அரசல் புரசலாக வெளியில் தெரிய, உறவினர்கள் சிலர் கண்டித்திருக்கிறார்கள். இருப்பினும் இதை பெரிதுபடுத்தாமல் இருவரும் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவதும் திருமணம் செய்துக்கொள்ள தயாராகியுள்ளனர்.

    Advertisement

    சினிமா பாணியில் திருமணத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோயிலில் மாலையை மாற்றிக்கொண்டு, திருமண கோலத்தில் ஊருக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், ரோட்டில் வைத்து இளம்பெண் பூஜாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதை தடுக்க வேண்டிய பெற்றோரும், பூஜாவை தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த திருமணத்தை பெற்றோர் எதிர்க்க, வயது ஒரு குறிப்பிட்ட காரணமாக இருந்தாலும், இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் பூஜாவை மாப்பிள்ளை வீட்டார் தாக்கியிருக்கின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

    English Summary

    In India, the legal age for marriage is set at 21 for men and 18 for women. However, child marriages continue to take place in the country. Typically, it is girls who are affected by this issue; yet, in a recent case in Bihar, a 17-year-old boy was the one affected by a child marriage.