ரயிலில் போனா ரத்தக் கண்ணீர்! கதவை உடைச்சு.. ஜன்னலில் குதிச்சு! வடமாநில பயணிகள் அட்டகாசம்! வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சத் பூஜா பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலையில், பஞ்சாப் மாநில ஜலந்தர் ரயில் நிலையத்தில் முன்பதிவு ரயில் பெட்டிகளின் கதவை உடைத்துக் கொண்டு ரயிலில் ஏற முயற்சித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வடமாநில பயணிகள் ரயில்களில் அத்துமீறும் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சத் பூஜா பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 25 முதல் 28 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வேலை பார்க்கும் பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு பண்டிகைக்காக பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அக்டோபர் 22ஆம் தேதியான நேற்று ஜலந்தர் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் நோக்கி செல்வதற்காக மக்கள் பெரும் திரளாக கூடினர்.

indian railways train video

சத் பூஜா

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் திரண்டதால், பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக முயன்றபோதும், பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக இருந்ததன் காரணமாக நிலையம் முழுவதும் பரபரப்பாக மாறியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோக்களில், சிலர் ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே கதவுகளை வலுக்கட்டாயமாக திறந்து ஏறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிலர் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்ததுடன், ஏற்கனவே நிரம்பிய ரயில்களில் நெரிசலாக நிற்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

உபி தொழிலாளர்கள்

இந்த பரபரப்பான சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே துறை 5,000க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கியிருந்தது. மேலும், முக்கிய நிலையங்களில் 'வார் ரூம்' கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை அளவுக்கு மீறி இருந்ததால் நிலைமை கை மீறியே காணப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்தரப்பிரதேசம் மட்டும் 1.2 கோடி புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. தற்போதைய கணக்குப்படி, அந்த எண்ணிக்கை 1.5 கோடியை கடந்திருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

ரயில் நெரிசல்

இதனால் ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் இந்திய ரயில்வே கட்டமைப்பில் கடுமையான பற்றக்குறை ஏற்பாடுகிறது. ஜலந்தர் ரயில் நிலைய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிலர் போதுமான ரயில்கள் பயணிகளுக்காக இயக்கப்படுவதில்லை என ரயில்வே துறையை குற்றம் சாட்டியுள்ளனர். மற்றொரு பக்கம், சில நெட்டிசன்கள் பயணிகள் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் நடந்து கொள்வதால் தான் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுகின்றன எனக் கூறியுள்ளனர். இது தொடர்பாக புகார் தெரிவித்திருக்கும் சமூக வலைதள பயனர் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ரயில்வே துறை

பீகார், உபி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் பணிபுரியும் நிலையில், இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் அந்த மாநிலங்களுக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டுமெனவும், குறிப்பாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், முன்பதிவில்லா முழு ரயிலையும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்பதிவுள்ள பெட்டிகளில் முன்பதிவு இல்லாத பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+