Guru Peyarchi 2026: சிம்ம ராசிக்கு அஷ்டமசனியில் இருந்து விடுதலை.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு சிம்ம ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு குருப்பெயர்ச்சி விடுதலையை கொடுக்கும். அஷ்டமசனியில் இருந்து தப்பிக்கக்கூடிய நேரம். சிம்ம ராசிக்கு 5, 8க்கு உரிய குரு பகவான் 12 ஆம் இடத்துக்கு வந்து உச்சம் பெறுகிறார். விலை உயர்ந்த பொருள்களை கையாளும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணம், நகை, ஆவணங்கள் போன்றவற்றை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
தாய், தந்தைக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டம் நீங்கும். எதிரிகள் விஷயத்தில் வெற்றி ஏற்படும். உங்களுடன் இருக்கும் உறவுகளால் நல்லது ஏற்படும். நீங்கள் கோபப்பட்டாலும் கூட உங்களைத் தாங்கிப் பிடிக்க நல்ல உறவுகள் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கவனம்
ஒருவிதமான மரண பயம் நீங்கும். 35 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, வயிறு, கால், முட்டி தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரும் டிசம்பர் மாதம் வரை ராகு கேது அமைப்பு இருப்பதால் உங்களின் துணையின் பேச்சை கேட்பது, பெற்றோர், நலம் விரும்பிகளின் பேச்சைக் கேட்பது நல்லது.
கோபம் வேண்டாம்
இந்த காலகட்டத்தில் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு எதிராக நிறைய விஷயங்களை செய்பவர்கள் நல்லவர்போல பேசுவார்கள். உஷாராக இருப்பது நன்மை பயக்கும். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது மிதுனத்தில் இருந்த குரு காலகட்டத்திலேயே புரிந்திருப்பீர்கள். பதட்டம் கொள்வது, அவசரப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
முதலீடு
நிறைய நல்லவை நடக்கும். முதலீடுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
வழிபாடு
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். படிப்பு, உத்தியோகம், தொழில், வேலையில் இருந்த தடைகள் நீங்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருக்கொள்ளிக்காடு சென்று வருவது, பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications