புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி

  • மாஸ்கோ: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டீசல் விலையை குறைக்கும் வகையில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்ததை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் டீசல்விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டீசல் விலை உயர்வு எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இது டிரம்ப் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை கேள்விக்குறியாக்கலாம்.

    Advertisement

    இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேறு வழியின்றி ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க எதிர்ப்பு தெரிவித்து வரிகளை தீட்டிய டிரம்ப் இப்போது ரஷ்யாவிடம் பணிந்துள்ளார். தனது கட்சி வேட்பாளர்களின் தேர்தல் வெற்றிக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கையேந்தி ஒப்பந்தம் செய்தார்.

    இந்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து 'அகியோய் ஃபானெண்டஸ்' என்ற கப்பலில் இந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளது.
    மால்டா நாட்டின் கொடியுடன் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டுள்ள இந்த கப்பல் நவம்பர் 7 ம் தேதி அமெரிக்காவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    2022ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்காவில் தடை விதித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யாமல் இருந்தது. டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகும் இந்த தடை தொடர்ந்து வந்தது.

    ஆனால் தற்போது அமெரிக்காவில் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக அக்டோபர் 9 ம் தேதி அமெரிக்கா - ரஷ்யா இடையே திடீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரஷ்யா உடனடியாக 3,00,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கும் உலகச் சந்தைகளுக்கும் வழங்கும். நவம்பர் மாதத்தில் மேலும் 5,00,000 டன் டீசலும், அதைத் தொடர்ந்து மேலும் 1 மில்லியன் டன் டீசலையும் ரஷ்யா வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதன்படி தற்போது அமெரிக்கா நோக்கி ரஷ்யாவில் இருந்து டீசல் புறப்பட்டுள்ளது.

    Advertisement

    முன்னதாக உக்ரைன் போர் காரணமாக, 2023 பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியம், அதன் பிறகு அமெரிக்காவில் ரஷ்ய பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதித்தது. அதன்பிறகு, ரஷ்யா தனது டீசலை முக்கியமாக துருக்கி, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது.

    இது தவிர, ரயில் போக்குவரத்து மூலம் மத்திய ஆசிய நாடுகளுக்கும் ரஷ்யா டீசல் விநியோகம் செய்து வந்த நிலையில் தற்போது அமெரிக்காவிற்கும் டீசல் செல்கிறது. இந்த தேவை அதிகரிப்பால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யா தனது டீசல் ஏற்றுமதியை மாதத்திற்கு 3-3.5 மில்லியன் டன்கள் என்ற அளவுக்கு அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Russia Diesel: Diesel prices in the United States are rising sharply. With the midterm elections just 10 days away, U.S. President Donald Trump has entered into an agreement with Russia aimed at lowering diesel prices. Following this agreement, an initial shipment of 40,000 metric tons of diesel has been dispatched from Russia to the United States.