கனவிதுதான் நிஜமிதுதான்.. போதையில் புரண்ட தமிழ்நாடு! கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த குடிகாரர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு தீபாவளி நாளில் மட்டும் 260 கோடிக்கு மறு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த முறை 206 கோடிக்கு மட்டுமே மது விற்பனை நடந்துள்ளது. கிட்டத்தட்ட இது 54 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது கடைகளில் 441 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது 789 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

TASMAC Liquor Diwali

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

தீபாவளிப் பண்டிகை

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும்.

மது விற்பனை

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகவே மது விற்பனை நடந்திருக்கிறது. முன்னரே சொன்னது போல கடந்த ஆண்டு 789 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இது 2024 விட 30 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மண்டலத்தில் மட்டும் 170 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு பாதிக்கு பாதி கிட்டத்தட்ட மது விற்பனை குறைந்து இருக்கிறது என்கின்றனர்.

தொடர் விடுமுறை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடந்தாண்டை விட கிட்டத்தட்ட பாதி குறைந்திருக்கிறது. அதாவது நவம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது கடைகளில் 441 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது.

ரூ.206 கோடி

சனிக்கிழமை 234 கோடிக்கும், தீபாவளி அன்று 206 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. சென்னை மண்டலத்தில் 95 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 88 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 87 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 70 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

54 கோடி குறைவு

கடந்த ஆண்டு தீபாவளி நாளில் மட்டும் 260 கோடிக்கு மறு விற்பனை நடைபெற்றது. இந்த முறை 206 கோடிக்கு மட்டுமே மது விற்பனை நடந்துள்ளது. கிட்டத்தட்ட இது 54 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்ததாக சொல்கின்றன டாஸ்மாக் அதிகாரிகள்.

தனியார் பார்கள்

அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இருந்த பகுதிகளில் தற்போது தனியார் பார்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கணக்கு டாஸ்மாக்கில் மட்டும் நடந்தது என்பதும், fl2 பார்களில் நடந்த விற்பனையை பார்க்கும் போது இது பல மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர். இதனால் அரசுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்பட்டு தனியார் கைகளுக்கு அதிக பணம் செல்கிறது என்கின்றனர் குடிகாரர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+