அமைதி பேச்சுவார்த்தையா! இனி அது எப்படி நடக்கும்? வாயை விட்ட ஈரான் தலைவர்!
தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் தேசிய சொத்துக்கள் என்றும், அவற்றைத் தற்காத்துக் கொள்வது ஒவ்வொரு ஈரானியரின் கடமை என்றும் முஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இப்படி இருக்கையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈரான் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன பேசினார் கமேனி?
ஈரானின் அடையாளமாக விளங்கும் அறிவியல், தொழில் நுட்பம், நானோ டெக்னாலஜி மற்றும் பயோ டெக்னாலஜி போன்ற அனைத்து துறைகளையும் ஈரான் பாதுகாக்கும். ஈரானின் நிலம், நீர் மற்றும் வான்வெளியை எப்படிப் பாதுகாக்கிறோமோ, அதேபோல அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களையும் பாதுகாப்போம் என அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
சர்ச்சை கருத்து
வழக்கமாக ஒவ்வொரு நாடும் தங்களுடைய உள் கட்டமைப்புகளை பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால், எந்த நேரத்தில் எதை சொல்ல வேண்டும் என்கிற நேரம் காலம் இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ரெடியாகி வரும் இந்த நேரத்தில் ஈரான் இப்படி பேசியிருப்பது அமெரிக்காவை டென்ஷனாக்கும். எனவே பேச்சுவார்த்தை நடப்பதே டவுட்டுதான் என்று பலரும் கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஒரு புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்து வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சிக்கலில் உலக நாடுகள்
ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20% நடைபெறும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இது இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கியிருக்கிறது. எனவே எப்போது போர் முடியும்? என்று மொத்த உலகமும் எதிர் பார்த்து காத்திருக்கிறது. இந்த நேரத்தில் ஈரான் மேற்குறிப்பிட்டவாறு பேசியிருப்பது, எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போட்டதை போல இருக்கிறது.












Click it and Unblock the Notifications