Thulam Rasi Palan: துலாம் ராசியினருக்கு மே மாதம் செம யோகம்.. எதிர்பார்த்த விஷயம் நடக்கும்
மே மாத பலன்கள் 2026: துலாம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், துலாம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு ஆட்டத்தை ஆரம்பிக்கும் நேரமாக இருக்கும். இடுப்பு வலி, பின்புற வலி போன்ற வலிகளில் கவனம் தேவை. கையிருப்பு பணத்தை வங்கியில் போட்டு சிக்குவது, வெளியில் கொடுத்து சிக்குவது போன்ற நிலைமைகள் இருக்கும். காசு, பணம், அதிர்ஷ்டம், குடும்பம் போன்ற விஷயங்களில் எந்தவொரு தொந்தரவும் ஏற்படாது.
வீடு வாங்கும் யோகம்
அரசாங்கத் துறையில் பெரிய பொறுப்புகள், வேலை கிடைக்கும். அரசு அதிகாரிகளாக நீங்களே மாறும் வாய்ப்புகள் ஏற்படும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, பத்திரம் பதிவது போன்ற அமைப்பு ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். முழு சுதந்திரம், தெய்வ அனுக்கிரகத்தோடு செயல்படக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
பல நல்ல மாற்றங்கள் நடைபெறக்கூடிய காலமாக அமையும். குறிப்பாக தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில விஷயங்கள் இந்த மாதத்தில் சாதகமாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் சூழல் உருவாகும்.
முதலீடுகள்
வேலை மாற்றம் நினைப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கலாம். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை குறைந்து வருமானம் அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். குடும்ப தேவைகளுக்காக அதிக செலவுகள் ஏற்படலாம். முதலீடு செய்வதில் அவசரம் காட்டாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
ஜாக்பாட்
துலாம் ராசியினருக்கு பட்டாபிஷேகம் நடக்கக்கூடிய யோகம் உண்டு. என்ன வேண்டுமோ, செய்ய வேண்டுமோ அதனை திட்டமிட்டால் அற்புதமாக நடக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் அற்புதமான நேரமாக இருக்கும். துலாம், தனுசு, சிம்மம், மேஷம் ஆகிய ராசிகளைக் கொண்ட துணையாக இருப்பின் உங்களை கையால் பிடிக்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டங்கள் கொட்டும்.
வழிபாடு
பொருளாதாரம், நம்பிக்கை, தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நிதி சார்ந்த விஷயங்களில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிறைய சந்தோஷம், வெற்றியைப் பெறக்கூடிய அருமையான அமைப்பு உள்ளது. ஒரு விஷயத்தை நினைத்தால் அது ஜெயிக்கும் யோகம் உண்டு. மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீத நன்மைகளையும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.












Click it and Unblock the Notifications