போர்க்களத்திற்கு வரும் புனிதர்களின் அழுகிய உடல் பாகங்கள்! உக்ரைனை ஜெயிக்க.. ரஷ்யாவின் புது ஐடியா!

  • மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில், ராணுவ வீரர்களின் மனவலிமையை அதிகரிப்பதற்காக.. தங்கள் நாட்டு பண்டைய புனிதர்கள் மற்றும் போர்வீரர்களின் புனித உடல் எச்சங்களை ரஷ்யா போர்க்களத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இது ஒரு வித்தியாசமான ஆன்மீக-அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    உக்ரைனுடன் 5வது ஆண்டாக ரஷ்யா போரிட்டு வருகிறது. தம்மாத்துண்டு நாடு உக்ரைன்.. ஆனால் 5 ஆண்டுகளாக ரஷ்யாவால் அசைக்க கூட முடியவில்லை. காரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சப்போர்ட்தான். இப்படி இருக்கையில், ரஷ்ய வீரர்கள் சோர்ந்துபோய்விடக்கூடாது என்பதற்காக இந்த ஐடியா ஃபாலோ செய்யப்படுகிறது.

    Advertisement

    போர் வீரர்களுக்கு தைரியம்

    போர் வீரர்களுக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து சோர்வடையாமல் சண்டை செய்ய வேண்டும் என்பதற்காகவும் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கு, தனது இடைக்கால மன்னர்கள் மற்றும் போர் வீரர்களின் புனித உடல் எச்சங்களை ரஷ்யா அனுப்பி வருகிறது.

    குறிப்பாக கி.பி.1380ல் நடந்த குலிகோவோ போரில் மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்கோ இளவரசரான டிமிட்ரி டான்ஸ்காய் என்பவரின் வலது கையின் எச்சம், இந்த கைதான் அவர் வாள் ஏந்திய கை என்று சொல்லப்படுகிறது, அந்த கையின் எச்சத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    Advertisement

    போர்க்களத்தில் ஆன்மீகம்

    ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச் என்கிற ராணுவ பிரிவு இந்த தியாகி மற்றும் புனித தளபதி போர்க்களத்தில் ரஷ்ய வீரர்களுடன் தோளோடு தோள் நிற்பார் என்றும், இது வீரர்களுக்கு ஆன்மீக மற்றும் உடல் ரீதியான பலத்தை தரும் என்றும் கூறியுள்ளது. டான்ஸ்காய் மட்டுமல்லாது, மற்றொரு புகழ்பெற்ற இடைக்கால ரஷ்ய மன்னரான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்பவரின் புனித எச்சங்களும் முன்னதாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டன.

    கிறிஸ்தவம்தான் இங்கு எல்லாம்

    இந்த நடவடிக்கை குறித்து போர்தாம் பல்கலைக்கழகத்தின் சமய அறிஞர் செர்ஜி சாப்னின் கூறுகையில், "ரஷ்ய அரசு மற்றும் சர்ச் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றாக இணைந்துவிட்டன" என்று சாடியிருக்கிறார். ரஷ்யா தன்னை ஒரு அக்கிரமிப்பாளராக காட்டிக்கொள்ளாமல், தனது தாய்நாட்டை பாதுகாக்கும் ஒரு தற்காப்பு போரில் ஈடுபடுவது போன்ற பிம்பத்தை உருவாக்கவே, நாட்டின் தற்காப்புக்காக போரிட்ட டான்ஸ்காய் போன்ற வரலாற்று நாயகர்களின் எச்சங்களை அனுப்பி வைக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    மற்றொரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியாரான அலெக்சாண்டர் சானெமோனெட்ஸ் இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேசபக்தி என்ற பெயரில் தேவாலயத்தை அரசு சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது என்று விமர்சித்திருக்கிறார்.

    ரஷ்ய வீரர்களின் நிலைமை

    இந்த போரில் ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உடல் அளவில் பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், மனதளவில் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. போர்க்களத்தில் கடுமையான குளிரையும், சவால்களையும் எதிர்கொள்ளும் சில வீரர்கள், இந்த ஆன்மீக நகர்வை வரவேற்கின்றனர். நிலைமை மோசமாக இருக்கும்போது அனைவரும் கடவுளை தேடுகிறார்கள். அரசு இப்படி செய்வது ஒரு வகையில் எங்களுக்கு ஆதரவை தருகிறது என்று கூறுகின்றனர்.

    Advertisement

    ராணுவ வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?

    ஆனால், சில வீரர்கள் இதை வேறு கோணத்தில் பார்க்கின்றனர். "நாங்கள் இப்போது 21ம் நூற்றாண்டின் போர்க்களத்தில் நின்றுக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இந்த போரின் பிரச்சனைகளுக்கு இது வித்தியாசமான தீர்வு. இந்த புனித எச்சங்கள் போர்க்களத்தில் இருக்கும் எங்களை விட.. போரில் உயிரிழந்த தாய்மார்களுக்குதான் மன அமைதிக்காக அதிகம் தேவைப்படுகிறது" என்று கூறுகின்றனர்.

    English Summary

    Russia: In the war against Ukraine, Russia has sent the sacred bodily remains of its ancient saints and warriors to the battlefield to boost the morale of its soldiers. This is viewed as a unique spiritual-political move.