வேற வேலை இல்ல, இங்கேயே சுத்திகிட்டு இருக்காரு! ஜெரோம் பவல்-ஐ வம்பிழுத்த டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை முடிவுகள் வெளியானது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பெட் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட வேளையில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைப்பதாக பெடரல் ரிசர்வ் கவர்னர் அறிவித்தார்.

இந்த முடிவு உலகப் பொருளாதாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பல பெட் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது இந்த முடிவை மேலும் முக்கியமாக்குகிறது. வட்டி விகித முடிவால் பங்குச்சந்தை சரிவுக்கு சென்றது, இதனால் தங்கம் விலையில் சிறிய அளவிலான உயர்வு பதிவாகியுள்ளது.

Trump Federal reserve USA inflation Trump Powell Feud Fed Rate Decision April 2026 Jerome Powell Stays as Governor US Inflation Concerns 2026 Fed Holds Rates Unchanged 2026 Trump mocks Jerome Powell Fed leaves rates unchanged April 2026 Jerome Powell stays as Fed Governor Fed Chair term ends May 15 Trump Truth Social Powell Four Fed members dissent 2026 No Fed rate cut 2026 US inflation elevated Surging energy prices Fed Fed decision April 29 2026 Powell low profile Governor Fed bracing for inflation Odds of rate cut fall to 44 Federal Reserve meeting 2026 Trump criticises Powell job 2026 15 2026 29 44 2026

இந்த முறை 4 பெட் உறுப்பினர்கள் வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெட் தலைமை முடிவுக்கு 4 பேர் எதிர்ப்பு தெரிவித்தது 1992-க்குப் பிறகு இது முதல் முறையாகும். மேலும், 3 உறுப்பினர்கள் அறிக்கையில் "தளர்வு நோக்கு" (easing bias) சேர்ப்பதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்த கருத்து வேறுபாடுகள் பெட்-இன் முடிவெடுக்கும் செயல்முறையில் அதிகளவிலான சிக்கல்கள் இருப்பதையும், புதிதாக வரும் பெட் தலைவர் பதவியேற்க்கும் முன்பு பெட் குழுவில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

மத்திய கிழக்கு போர் பதற்றம் அமெரிக்க பொருளாதாரத்தில் அதிகளவிலான நிச்சயமின்மையை ஏற்படுத்துவதாக பெட் தலைவர் ஜெரோம் பவல் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, எரிபொருள் விலைகள் உயர்வது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது.

பெடரல் ரிசர்வ், முன்பு "சற்று உயர்ந்த நிலையில் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்த பணவீக்கத்தை இப்போது "உயர்ந்த நிலையில் உள்ளது" என்று மாற்றி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் பெட் அமெரிக்க பொருளாதாரத்தில் அதிக பணவீக்கத்துக்கு ('பாம்') தயாராகி வருவதாகத் தெரிகிறது.

இந்த முடிவுக்குப் பிறகு, 2026-ம் ஆண்டில் பெட் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்ப்பு பெருமளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டில் விகிதக் குறைப்பு நிகழும் வாய்ப்பு 44 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கியமான தகவலாகும்.

ஜெரோம் பவல் பதவி

பெட் தலைவர் ஜெரோம் பவல் தன் தலைமைப் பொறுப்பு மே 15 அன்று முடிவடைந்த பிறகும் பெட் வாரிய உறுப்பினராகத் தொடர முடிவு செய்துள்ளார். அவர் low profile உடன் செயல்படுவேன் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பெட்-இன் தொடர்ச்சியான தலைமை மாற்றத்திற்கு உறுதியளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்ப் சீண்டல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பவல் தொடர்ந்து பொறுப்பில் இருக்க விரும்புவது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். "பவலுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காததால் அவர் பெட்-இல் இருக்க விரும்புகிறார். யாரும் அவரை விரும்பவில்லை" என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்தக் கருத்து அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, பெட்-இன் இந்த முடிவு உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் காரணிகள் அடுத்த கட்ட முடிவுகளை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சாதாரண மக்களுக்கு இது கடன் வட்டி, வங்கி சேமிப்பு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+