உத்தர பிரதேசத்தை விடவே கூடாது.. பாஜக களமிறக்கிய தேர்தல் எக்ஸ்பர்ட் வினோத் தாவ்டே.. யார் இவர்?

  • லக்னோ: கடந்த 2024 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக கடும் சரிவை கண்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் எப்படியாவது சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக வினோத் தாவ்டேவை பாஜக களமிறக்கி உள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேசத்தில் கடந்த 2017, 2022 என 2 சட்டசபை தேர்தல்களில் பாஜக வென்று ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்தியாவிலேயே அதிகமான சட்டசபை தொகுதிகள் (403 தொகுதிகள்), லோக்சபா தொகுதகிள் (80) உள்ளன. அதுமட்டுமின்றி டெல்லியின் அருகே உத்தர பிரதேசம் அமைந்துள்ளது. ஹிந்தி பேசும் மாநிலமாகவும் உத்தர பிரதேசம் உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது என்பது மத்தியில் அந்த கட்சியை எளிதாக அரியணை ஏற்றும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக சரிவை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 33, கூட்டணி கட்சிகள் 3 தொகுதகிள் என்று மொத்தம் 36 தொகுதிகளில் (2019 தேர்தலை ஒப்பிடும்போது 28 தொகுதிகள் குறைவு) மட்டுமே வெற்றி பெற்றது. 'இந்தியா' கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றியது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஏஎஸ்பி (கேஆர்) கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

    Advertisement

    குறிப்பாக அயோத்தி ராமர் கோவிலை உள்ளடக்கிய லோக்சபா தொகுதியிலேயே பாஜக தோல்வியடைந்தது. அங்கு சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார். இது பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. இந்த சரிவு வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதனை சரிசெய்ய தான் பாஜக முக்கிய தலைவரை களமிறக்கி உள்ளது.

    உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளராக பாஜக சார்பில் வினோத் தாவ்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளராக ஜெகதீஷ் ஈஸ்வர்பாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் வினோத் தாவ்டேவின் நியமனம் அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் இவர் பாஜகவில் தேர்தல் வியூகம் வகுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    வினோத் தாவ்டே பாஜகவின் தேசிய செயலாளராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்தவர். ஓபிசி பிரிவை சேர்ந்தவர். இவர் கடந்த 2014ம் ஆண்டில் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்தபோது பள்ளி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் - மருத்துவ கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். அதுமட்டுமின்றி விளையாட்டு, இளைஞர் நலன், மகாராஷ்டிரா சட்டசபை விவகாரங்கள் உள்ளிட்ட துறைகளை நிர்வகித்தார். கடந்த 2019 ம் ஆண்டில் அவருக்கு தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் மகாராஷ்டிரா அரசியலில் இருந்து வெளியேறி தேசிய அரசியலில் நுழைந்தார்.

    கடந்த 2022ம் ஆண்டில் பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது வினோத் தவா்ரே தான் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளை திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து வெற்றி பெற செய்தார். அதேபோல் கடந்த 2025ம் ஆண்டில் துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை வினேதா் தாவ்டோ தான் பேமற்கொண்டார்.

    Advertisement

    அதற்கு முன்பாக கடந்த 2022ம் ஆண்டில் பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வியூக வகுத்து வெற்றி பெற வைத்தார். இது அப்படியே 2024 பீகார் லோக்சபா தேர்தலிலும் எதிரொலித்தது. பிறகு 2025ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியை வெற்றி பெற வைத்ததில் வினோத் தாவ்டே சிறப்பாக செயல்பட்டார். தற்போது பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீகார் வரலாற்றில் முதல் முறையாக பீகாரில் பாஜக சார்பில் சாம்ராட் சவுத்ரி முதல்வராகி உள்ளார்.

    இதுதவிர திரிபுரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர் தேர்வு செய்தது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்டவற்றில் பாஜகவில் அமைப்பு ரீதியாக பணியாற்றியது, தேர்தல் வியூகங்கள் செய்த அனுபவம் கொண்டவர். இதில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக தோற்றது. குஜராத், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனால் தான் வினோத் தாவ்டேவை உத்தர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமனம் செய்துள்ளது.

    English Summary

    Vinod Tawde: The BJP suffered a severe setback in Uttar Pradesh during the 2024 Lok Sabha elections. With Assembly elections scheduled for the state early next year, the party has deployed Vinod Tawde as the election in-charge for Uttar Pradesh, aiming to secure a victory and retain power at all costs.