Tiger Shroff: பிரபல நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டுக்கொல்ல முயற்சி.. துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்!

  • மும்பை: பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டுகொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி டைகர் ஷெராப் உயிர் தப்பினார். டைகர் ஷ்ராப் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பில் மகன் ஆவார்.

    Advertisement

    பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப். இவர் இன்று மாலை மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் டைகர் ஷெராப்பின் கார் டிரைவர் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் என இருவர் காயம் அடைந்தனர்.

    Advertisement

    லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்

    எனினும், அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் காயமின்றி தப்பினார். கால்பந்து மைதானத்தில் இருந்து நடிகர் கிளம்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டைகர் ஷெராப் ஏன் குறிவைக்கப்பட்டார்.. அவரை கொல்ல முயற்சி நடைபெற்றதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று அனில் பண்டிட் என்பவர் பேசும் காட்சிகள் உள்ளன. அவர் கூறும் போது, "தங்களது டார்கெட் லிஸ்ட்டில் ஷெராப் உள்ளார். எங்களது அறிவுறுத்தல்களை அவர் பின்பற்றவில்லை. சல்மான் கானுடன் இணைந்து நடித்து வந்தார்" என்று கூறினார்.

    Advertisement

    என்ன நடந்தது?

    துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். தடயவியல் குழுவினர் அங்கு கிடந்த துப்பாக்கி குண்டுகளை எடுத்து சென்று ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பைக்கில் பின்பக்கம் இருந்த நபர் நெருக்கமாக வந்து துப்பாக்கியால் சுட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

    துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த நடிகர் டைகர் ஷெராப்பின் டிரைவர் தற்போது மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவர் நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆட்டோ டிரைவர் ஒருவரும் காயம் அடைந்த நிலையில், அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Advertisement

    மகாராஷ்டிரா முதல்வர்

    பாலிவுட் நடிகரையே கொல்ல நடந்த முயற்சி, பாலிவுட் சினிமா வட்டாரம் மட்டுமின்றி மகாராஷ்டிரா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக மும்பை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு பேசினார். விசாரணையை துரிதப்படுத்தி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Tiger Shroff: An attempt was made to shoot and kill popular Hindi film actor Tiger Shroff. Fortunately, Tiger Shroff escaped the shooting incident unharmed. Tiger Shroff is the son of well-known Bollywood actor Jackie Shroff.